Friday, December 5, 2014

ஃபேஸ்புக்கிற்கு ஆப்பு வைக்கும் மெசேஜ் 'ஆப்'கள்

 ஃபேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை அனுப்பவது கடந்த மாதம் உலக அளவில் வெகுவாக குறைந்துள்ளது. மக்களிடையே ஃபேஸ்புக் மீதான மோகம் குறைந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஃபேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது 20 சதவீதம் குறைந்துள்ளது என்று லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குளோபல்வெப்இன்டெக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் மீதன மோகம் குறைய செல்போன்களில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன்கள் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக்

 ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு கடந்த மாதம் மெசேஜ் அனுப்பியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் வெகுவாக குறைந்துள்ளது.

 இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் 28 சதவீதம் பேர் என்ன நடக்கிறது என்பதை பார்க்க மட்டுமே ஃபேஸ்புக் செல்வதாகவும், எதையும் போஸ்ட் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அப்ளிகேஷன்கள்

இளம் வயதினர் செல்போன்களில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன்கள் மூலம் மெசேஜ் அனுப்பவும், புகைப்படங்களை பகிரவும் விரும்புகிறார்கள்.

 ஃபேஸ்புக் பயன்பாடு குறைவதற்கு அது போர் அடிப்பது, விருப்பம் இல்லாமை, தனிமை(பிரைவசி) இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது.

இந்தியாவில் நெட் பயன்படுத்துவோரில் 68 சதவீதம் பேர் 2013ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வீசாட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். வாட்ஸ் ஆப்பில் 62 சதவீதம் பேரும், ஃபேஸ்புக்கில் 63 சதவீதம் பேரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

 மெசேஜ் அப்ளிகேஷன்கள் துரிதமாக உள்ளதாக ஆய்வில் கலந்து கொண்ட 1 லட்சத்து 70 ஆயிரம் பேரில் 41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Blog Archive