Friday, December 5, 2014

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து

 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்ட பஞ்சாயத்து, அரசமரத்து பஞ்சாயத்து நடைபெற்றுதான் வருகிறது. இந்த பஞ்சாயத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண்கிறோம். அந்த வகையில், பீகார் மாநிலத்தில், 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 16 வயது சிறுமியை 4 காமூகர்கள் கடந்த 7 மாதத்திற்கு முன் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த கொடுமைக்கு அந்த 4 பேருக்கும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று அந்த சிறுமி பஞ்சாயத்தை நாடியுள்ளார்.

ஆனால், 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு கருக்கலைப்பு செய்துவிட வேண்டும் என்று அந்த சிறுமிக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

சிறுபான்மை சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் கிசான்கஞ்ச் மாவட்டம், பீகாரின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகும்

0 comments:

Post a Comment

Blog Archive