Friday, December 5, 2014

கமலின் ஐடியாவை கையில் எடுத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் ?

 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பறவைகளைத் தற்கொலைப் படையாகப் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ படையை எதிர்த்து தலிபான் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மேலும் தற்கொலை படை அமைப்பின் மூலம் மனித குண்டு தயார் செய்து பொது மக்கள் கூடியிருக்கும் இடங்களில் அடிக்கடி வெடிக்கச் செய்து வருகின்றனர்.

அதையும் ராணுவம் மற்றும் காவல் துறையினர் கண்டுபிடித்து முறியடித்து விடுகின்றனர். எனவே, தற்போது தற்கொலை தாக்குதல் நடத்த புதுவிதமான நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அவர்கள், மனிதர்களுக்கு பதிலாக பறவைகளைத் தற்கொலை படைக்குப் பயன்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் பர்யாப் மாகாணம் துர்க்மெனிஸ்தான் எல்லையில் உள்ளது.

அங்கு மிகப்பெரிய பறவை ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த ராணுவ அதிகாரிகள் பறவையை சுட்டு வீழ்த்தினர்.

சுடப்பட்ட பறவையின் இறக்கையில் பேட்டரிகளுடன் கூடிய மின் வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் உடலில் தற்கொலை படை தீவிரவாதிகளின் உடை அணிவிக்கப்பட்டிருந்தது.


உடலில் வெடி பொருட்கள் இருந்தன. அதை வெடிக்க செய்யும் செல்போன் டெட்டனேட்டர்களும் இருந்தன. இதன் மூலம் பறவைகளை தற்கொலை படையாக தலிபான்கள் மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திலும் தலிபான் தீவிரவாதிகள் பறவைகளை தற்கொலை படைக்கு பயன்படுத்துவதை போனறு காட்சிகள் அமைத்திருந்தார். இன்று அதே பாணியை தலிபான் தீவிரவாதிகள் கையில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியது.

0 comments:

Post a Comment

Blog Archive