Sunday, December 14, 2014

அப்ப சொர்ணமால்யா இப்ப ரம்யா…! மணிரத்னம் முடிவு

‘யாரோ யாரோடி உன்னோட புருஷன்…. யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்’ என்று சின்னத்திரை சொர்ணமால்யாவை வியந்து திரைக்கு கூட்டி வந்தவர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் சொர்ணமால்யாவின் அழகை அதே சொர்ணமால்யா நினைத்தாலும் இப்போது திரும்ப பெற முடியாது. அதற்கப்புறம் பல படங்களில் நடித்து ஃபேட் அவுட்டாகி தற்போது தனக்கு முதன் முதலில் அடையாளம் கொடுத்த சின்னத்திரைக்கே வந்துவிட்டார் சொர்ணா. நெக்ஸ்ட்?

முன்பெல்லாம் முக்கியமான விழாக்கள் என்றால் அது தொகுப்பாளினி ரம்யா இல்லாமல் நடக்காது. தழைய தழைய புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூவுடன் அவர் மைக்கை பிடித்தால், நிகழ்ச்சிக்கு குத்துவிளக்கே தேவையில்லை. அவரே ஒரு மங்களகரமான மூடுடன் நிகழ்ச்சியை துவங்கி வைப்பார். பேச வரும் விவிஐபிகளும் தொகுப்பாளிதானே என்கிற அலட்சியம் காட்டாமல் ரம்யாவுக்கும் சேர்த்து சில வார்த்தைகள் பேசிவிட்டு இறங்குவார்கள். கொஞ்ச நாட்களாக எல்லாமே மிஸ்சிங். ஏன்? ஏன்? ஏன்?

அவர் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார். சொர்ணமால்யாவை தொடர்ந்து மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையை தேடி வந்த மணிரத்னம் தனது புதிய படத்தில் ரம்யாவை நடிக்க வைத்திருக்கிறாராம். அவர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எவராக இருந்தாலும் பல்க் ஆக தேதியை கொடுத்திருக்க வேண்டும். அவர் எப்போது கேமிரா முன் நிற்க அழைக்கிறாரோ, அதற்கு தயாராக இருக்க வேண்டும். அந்த கடமைக்காக தன் வெகு கால கடமையான தொகுப்பாளினி வேலையை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார் ரம்யா.

மேடை வெளிச்சத்துல ஒட்டடை படியுது… உடனே வாங்க ரம்யா!

அமைச்சர்களை விளாசி தள்ளிய ஜெயலலிதா

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், மீண்டும் ஜெயலலிதா, கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பது கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா, ஜாமீனில் வெளி வந்த பிறகும் யாரையும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தவர்களுக்கு, அனுமதி கிடைக்கவில்லை. அவரது முடிவு தெரியாததால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், திட்டங்களை செயல்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். அரசு செயல்பாடுகள் முடங்கின, எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கின, கட்சியினரும் சோர்வடைந்தனர்.

தற்போது, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது, அவரது பார்வை ஆட்சி மற்றும் கட்சி மீது விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், முதல்வர் பன்னீர்செல்வம், அவரது செயலர்கள், அரசு ஆலோசகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அமைச்சர்கள் ஆகியோரை போயஸ் கார்டனுக்கு அழைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களிடம், அரசு திட்டங்களின் செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அதன்பின் அமைச்சர்களுடன், உட்கட்சி தேர்தல் குறித்து விவாதித்துள்ளார். அப்போது, பெண் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள் சண்முகநாதன், ஆனந்தன், ஆகியோரை கண்டித்துள்ளார்.
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணாததற்கு, அமைச்சர் தங்கமணியிடம் கடுமை காட்டியிருக்கிறார். அதேபோல் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, ஆகியோர் செயல்பாடுகளும் விமர்சிக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரு சாட் அசிங்கமாக நீண்டால்

ஃபேஸ்புக்கில் யாரோ என்றோ யாருடனோ செய்த chatஐ ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பரப்புகிறார்களாம்.. ஆதரவாகவும் எதிராகவும் பல பதிவுகள்.. 2000-2004 கால கட்டம்.. தமிழகத்தில் பரவலாக எல்லாம் ஊர்களிலும் ப்ரௌசிங் செண்டர் வர ஆரம்பித்தன.. இப்போது இங்கு பெரிய நொன்னைகளாக இருப்பவர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் முதன்முதலாக இண்டர்நெட்டில் எதைத் தேடினோம்? எதற்காக ப்ரௌசிங் செண்டர் எல்லாம் போனோம்?

இங்கும் ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.. இது ஒரு common ஆன விஷயம் தான்.. ஆரம்ப காலத்தில் ஒரு வித கிக்கிற்காக, மனக்கிளர்ச்சியில் இதையெல்லாம் செய்வார்கள்.. போகப்போக maturity வந்து விடும்..

வீட்டில் பதின்ம வயதில் இது மாதிரி காரியம் செய்து மாட்டிக்கொள்ளும் நம் பிள்ளைகளைப் பக்குவமாகப் பேசி, அவர்களுக்குப் புரியவைப்போமா, அல்லது சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரனிடம் எல்லாம் “என் பிள்ளையோட லட்சணத்தைப் பாரு”னு தம்பட்டம் அடிப்போமா? அந்தப் பக்குவத்தை ஏன் நம்மால் பிறரிடம் காட்ட முடியவில்லை? நம் வீட்டுப்பிள்ளை என்றால் நமது மானமும் அதில் சேர்ந்து கப்பல் ஏறிவிடும் என்கிற பயம்.. ஆனால் அதுவே இன்னொருவன் என்றால், அவன் மானம் கெடுவதைப் பற்றி நாம் யோசிப்பதேயில்லை..

இரண்டு வரிகளுக்கு மேல் ஒரு சாட் அசிங்கமாக நீண்டால் அதில் தவறு ஒருவர் பக்கம் மட்டும் கண்டிப்பாக இருக்காது.. அதே மாதிரி ஃபேஸ்புக், இண்டர்நெட்டில் எல்லாம் ஒருவர் ஆரம்ப காலத்தில் இது போல் செய்வதும் சகஜம் தான்.. முடிந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருங்கள், அல்லது அவருக்கு தனிப்பட்ட முறையில் பக்குவமாக அறிவுரை கூறுங்கள்.. தேவையில்லாமல் ஊர் முழுக்க தம்பட்ட அடிப்பது எதற்கும் பிரயோஜனப்படாது..

தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!

டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்திருந்த இ போஸ்ட் மூலம் மட்டுமே பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன.

ரஜினியின் பிறந்த நாளை உலகமே நேற்று கொண்டாடியது. நாட்டின் பிரதமர் தொடங்கி, சாமானிய ரசிகன் வரை அவரை அனைவருமே வாழ்த்தி மகிழ்ந்தனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்தினர்.

தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற இ போஸ்ட் முறையை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியது. நேற்று சென்னை அபிராமபுரம், கோபாலபுரம் தபால் நிலையங்களில் இபோஸ்ட் மூலம் பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் ரஜினிக்குக் குவிந்தன. இதனை அஞ்சல் துறை ஊழியர்கள் ரஜினி வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

இதுகுறித்து சென்னை மண்டல தபால் துறை அலுவலர் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில், " பொது மக்களைக் கவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில்

ஒன்று இ போஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோருக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தினோம். பெரிய வெற்றி பெற்றுள்ளது," என்றார்.

ரஜினி பேச்சை காப்பியடித்து பேசினார் காங்கிரஸ் “தியாகி” குஷ்பூ!

 ‘பாபா’ பட தோல்விக்குப் பின்னர் நடந்த ‘சந்திரமுகி’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. நான் யான அல்ல; குதிரை. கீழே விழுந்தாலும் சட்டென எந்திரிச்சிடுவேன். எனவே மீண்டும் வீரத்தோடு வருகிறேன்” என்றார்.
ரஜினியின் இந்த பேச்சை காப்பியடித்து, கொஞ்சம் உல்டா செய்து, காங்கிரஸ் மேடையில் முழங்கி இருக்கிறார் “சுதந்திரப் போராட்ட வீராங்கனை” நடிகை குஷ்பு.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்றார். திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது என்பதால் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர் காங்கிரஸ் நிர்வாகிகள். அதுபோல் காங்கிரஸ் கூட்டம் என்றாலே அவ்வளவாக ஆர்வம் காட்டாத பொதுமக்களும், குஷ்பு பங்கேற்றதால் எப்போதும் இல்லாத வகையில் கும்பலாக பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் தலைவர் தங்கபாலு, வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார், முன்னாள் எம்.பி.க்கள் ஆருண், மாணிக் தாகூர்ஆகியோர் கலந்துகொண்டனர்.
வழக்கமான உற்சாகத்துடன் குஷ்பு மைக்கை பிடிக்கவும் கூட்டத்தில் கிளம்பிய விசில் சத்தத்தையும், கைத்தட்டல் சத்தத்தையும் கேட்டு, மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே நடப்பது நம் கட்சி கூட்டம்தானா? என்ற சந்தேகம் வந்ததைப் போன்று, திகைப்புடன் பார்த்தனர். ஆனால் அதில் மகிழ்ச்சி ரேகை தென்பட்டது. தனது வழக்கமான உற்சாகத்துடன் பேச்சை தொடங்கிய குஷ்பு கூறியதாவது:-
வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டு மருமகளாகி தமிழ் கத்துக்கிட்டு தப்பு இல்லாமல் ஓரளவு தமிழ் பேசுறேன்னு சொன்னால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் மறைந்த தலைவர் காமராஜரும், பாரதியாரும் சந்தோஷப்படுவார்கள். கர்மவீரர் காமராஜர் பிறந்து வளர்ந்த ஊரில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன்.

எல்லோரும் ஏன் கட்சி மாறீனீர்கள்? என்று கேட்கின்றனர். நம்முடைய நல்ல கொள்கைகளை மாற்றிக் கொள்வது நல்லதா?அல்லது நம்முடைய நல்ல கொள்கைகளுக்கு இடம் தராத கட்சியில் இருப்பது நல்லதா?நான் அந்த கட்சியில் இருந்து மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்துவிட்டுத் தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப் போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சியில் ஏன் சேர்ந்தீர்கள்? என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி காங்கிரஸ் கட்சி. நமக்கு பேச்சுரிமை, கருத்துரிமையைப் பெற்று தந்தது காங்கிரஸ் கட்சி. நான் இன்றைக்கு சுதந்திரமாக எனது கருத்தை தைரியமாகப் பேசுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்.

இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ் கட்சிதான். இதில் இருந்துதான் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் எல்லாம் வந்தது. ஏன்… தமிழகத்தில்கூட திமுக, அதிமுக, மதிமுக கட்சிகள் எல்லாம் திராவிடர் கழகத்தில் இருந்து வந்தவைதான். தி.க. எதில் இருந்து வந்தது?  நீதிகட்சியில் இருந்து வந்தது. அந்த நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தது. எனவே  எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆணிவேர் காங்கிரஸ் கட்சிதான். இதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி மறுத்தால் இப்பவே என் பெயரை மாற்றிக் கொண்டு இந்த மேடையை விட்டு போய் விடுகிறேன்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று விட்டது. பா.ஜ.க. மக்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலின்போது என்ன சொன்னார்கள்?காஷ்மீர் பிரச்னையை தீர்ப்போம், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவோம், கறுப்பு பணத்தை மீட்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரைககும் எதையாவது செய்திருக்கிறார்களா? மோடி மஸ்தான் வேலை காட்டி ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி, மக்களை பற்றி சிந்திககாமல் ஆஸ்திரேலியா, பிரேசில், பூடான் என்று உலக நாடுகளில் சுற்றுலா சென்று வருகிறார்.

இந்தியாவில் தூங்கிக கொண்டிருககிற மககளை எழுப்பி சரியான பாதையில் கொண்டு செல்லும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தோற்றாலும் மீண்டு வரும். யானை கீழே விழுந்தால் எழுந்திரிக்க நேரம் அதிகமாகும். ஆனால் பந்தயக் குதிரை. கீழே விழுந்தால் மறுநிமிடமே துள்ளி எழுந்துவிடும். காங்கிரஸ் கட்சி பந்தயக் குதிரை. அது சீக்கிரம் எழுந்து நாட்டைக் காக்கும். தமிழகத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைக்க எல்லோரும் பாடுபடுவோம். கண்டிப்பாக நமது லட்சியம் நிறைவேறும்” என்றார் குஷ்பு.