Saturday, December 13, 2014

ஜெயலலிதாவை மீண்டும் சிறையில் அடைப்பேன்: சபதமிடும் தலைவர்

போஸ்டர்களின் மூலம் ஆர்ப்பாட்டம் நடத்தி ஜெலலிதாவை மீண்டும் சிறையில் அடைக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியவதாவது, தமிழக அரசு பெயரளவுக்கு சட்டமன்றத்தை நடத்துகிறது. நாடாளுமன்றத்துக்கு மோடி வருவதில்லை, அப்படியே வந்தாலும் எந்த பிரச்னைக்கும் பதில் சொல்வதில்லை.

இதற்கிடையே மக்களின் முதல்வர் என கூறிக்கொண்டு, வீட்டில் முடங்கி கிடக்கும் ஜெயலலிதா பன்னீர் செல்வத்தின் மூலம் ஆட்சி நடத்துகிறார்.

அவரது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க கோரி, போயஸ் கார்டன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் இவ்விடயத்தில் பொலிசார் எங்களை தடுக்க முயன்றால் அவர்களையும் மீறி நாங்கள் செயல்பட தயார் எனவும் பேட்டியளித்துள்ளார்.

ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி ஸ்பெஷல்!

சமூகத்தை அது சீரழிக்கிறது, இது சீரழிக்கிறது என்றெல்லாம் சொம்பைத் தூக்கிட்டு கிளம்புற கலாச்சார காவலர்களை நினைச்சால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆனால் ஓசையின்றி வீட்டுக்குள்ளேயே மிகப்பெரும் கலாச்சார சீரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் டிவிக்களை எப்படி இவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. வீட்டுக்கு வந்தா டிவி பார்ப்பது ஒன்றுதான் அவர்களுடைய பொழுது போக்காக இருக்கும் போது இதையெல்லாம் சிந்திக்க அவர்களால் முடியவில்லையோ என்னவோ!

கடந்த சனிக்கிழமை எதேச்சையாக டிவி சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்த போது ஒரு சேனலில் அம்பிகாவும் ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ தங்கள் சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டே அந்த சேனலைப் பார்த்தால், அவர்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்காக வந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும்தான் ஜட்ஜாம். அந்த நிகழ்ச்சியின் பெயர் ஜோடி சீசன்ஸ் 6 என்பதாம்.
jodi
வந்ததே வந்திட்டோம், என்னதான் நடக்குதுன்னுப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று பார்த்தால் ரெக்கார்டு டேன்ஸ் என்று சொல்வார்களே அதை அங்கே நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள். நகரங்களில் மட்டுமே ஒருகட்டத்தில் இருந்து கொண்டிருந்த கவர்ச்சி காட்டும் ரெக்கார்டு டேன்ஸ் அந்த சேனலில் நடந்து கொண்டிருந்தது. ஐஸ்வர்யா என்னும் பெண் அரைகுறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தார். அவரது உடையில் அப்படி ஒரு கவர்ச்சி. ஆடி முடிந்ததும், அம்பிகா அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி வந்தார்.

‘ம்… அடுத்த வாரம் நீங்க ஜோடியை மாற்றி ஆடணும்… யார் கூட ஆட ஆசைப்படுறீங்க’ என்று தொகுப்பாளினி கேட்கிறார். அதற்கு ஆடிய பெண்ணோ, ‘எனக்கு அவர் கூட ஆடணும்…’ என்று வேறு ஒருவர் பெயரைச் சொல்கிறார். தொகுப்பாளினி தன் கையில் ஒரு குடுவையை வைத்துக் கொண்டு அதில் குலுக்கல் முறையில் ஒரு பெயரை தேர்ந்தெடுக்கிறார். அதில் வேறு ஒரு பெயர் வந்திருக்க, ‘அவர் பெயர் சீட்டுல வரலை… எனவே நீங்க அவர் கூட ஆடப்படாது… இவர் கூடத்தான் ஆடணும்…’ என்று சீட்டில் பெயர் வந்தவரை சுட்டிக் காட்ட, சரி என தலையை ஆட்டிக் கொண்டு போகிறார் நடனம் ஆடிய பெண்.

அடக் கடவுளே இந்த டிவிப் பெட்டியில இப்படி ஒரு பெரிய கூத்தே நடக்கிறது நமக்கு இத்தனை நாட்களும் தெரியமப் போச்சே!

மலசல கூடத்தில் மஹிந்த..! ஓட்டம் எடுத்த பெண்…

 மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க நாடாளுமன்றில் கிண்டலடித்தார்.
பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவின் பதாகைகளை அரச தரப்பினர் ஒட்டிவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றிப் பேசி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

இலங்கையில் தனிநபர் ஒருவரின் வருமானம் 35,000 ரூபா என்று மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண அரச ஊழியர் ஒருவருக்கு இந்தச் சம்பளம் கிடைப்பதில்லை. புகையிரத நிலைய ஊழியர் ஒருவருக்கு 21,000 ரூபா சம்பளம் கிடைக்கிறது. அதில் 19,000 ரூபா மட்டுமே அவருக்கு சம்பளமாகக் கிடைக்கும்.

அதில் மின்சாரக் கட்டணம் 2,000 ரூபா, தண்ணீர் கட்டணம் 1,000 ரூபா, போக்குவரத்துச் செலவு 6,000 ரூபா என 9,000 ரூபா செலவாகின்றது. எஞ்சியிருக்கும் 10,000 ரூபாவில்தான் உணவு, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட ஏனைய செலவுகளைப் பார்க்கவேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் நூற்றுக்கு 50 வீதமான மக்கள் ஒருவேளை உணவு உண்ணமுடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது.

மலசலகூடத்துக்குள் சென்ற பெண்ணொருவர் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். ஏன் எனக் கேட்டால் உள்ளே ஒருவர் இருக்கின்றார் என்றார். யார் இருக்கின்றார் என்று உள்ளே சென்று பார்த்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் உள்ளே இருந்தது.
உள்ளே எவரும் இல்லை. அது ஜனாதிபதியின் கட்-அவுட்டே உள்ளது என்று அந்தப் பெண்ணிடம் கூறினோம்” எனத் தெரிவித்தார்.

புதிய வசதி அறிமுகம் : இன்டர்நெட் இல்லாமல் யு டியூப் வீடியோ பார்க்கலாம்


கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளித்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் இணைய தள பயன்பாடு அதிகம் இருக்கிறது. எனவே யு டியூப் அப் மூலம் வீடியோக்களை ஆன்லைன் பார்க்கும்போது அது 48 மணி நேரத்துக் சேமித்து வைக்கப்படும்.

ஒருமுறை இவ்வாறு பார்த்தபிறகு 48 மணி நேரத்துக்குள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோவை பார்க்கலாம். மொபைல் அப் மூலம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. இதே வசதி பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவில் தற்போது உள்ளது. அதையடுத்து இந்தியாவிலும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ‘‘இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது.

இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் இதன்பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்’’ என்றார். இதற்கென சரிகமா டிசீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யு டியூப் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதுபோல் இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் யு டியூபுக்கு இந்தியா 5வது பெரிய சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.