Monday, December 15, 2014

ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்: தள்ளுபடி செய்யப்பட்ட மனு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதலில் அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் ஆச்சாரியா. பிறகு பவானிசிங் அந்த பதவிக்கு வந்தார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27ம் திகதி தீர்ப்பளித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார்.

வாதத்தின் இறுதியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பவானிசிங் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இருப்பினும் உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் வழக்கறிஞர் மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக செயல்படுவதற்கு மட்டுமே பவானிசிங்கிற்கு அனுமதியுண்டு.
அவர் உயர் நீதிமன்றத்திலும் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்கு அனுமதி கிடையாது. எனவே வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ஒரு தேவாங்கு

 ஒரு நிமிஷம் இதை நங்கள் சொல்லவில்லை எங்களை திட்டவேண்டாம், இதை கூறியது குறிப்பிட்ட வார இதழ். ஆம் ஆனால் இது இப்போது கூறியதும் இல்லை, அதாவது நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் தன் முதல் படத்திற்காக பெற்ற முதல் பத்திரிகை விமர்சனம் இதுதான்.

விவரமாகவே சொல்கிறோம், நடிகர் விஜயின் முதல் படமான “ நாளைய தீர்ப்பு “ வெளிவந்த சமயத்தில் அதற்கு குறிப்பிட்ட வார இதழ் வெளியிட்ட விமர்சனத்தில் “ இந்த நடிகர் பார்ப்பதற்கு தேவாங்கு போல் இருக்கிறார், தன் மகன் என்ற காரணத்தால்தான் இயக்குனர் S.A.C அவர்கள் நடிக்க வைத்துள்ளார் “ என்ற ரீதியில் அந்த விமர்சனம் அமைந்தது. ஆனால் அதே குறிப்பிட்ட வார இதழ் சில மதங்களுக்கு முன் நடிகர் விஜய்க்கு “ Next Super Star “ அதாவது “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டதை கொடுக்க அதிக முனைப்புடன் செயல்பட்டு வந்ததது நமக்கேத் தெரியும்.

இதனால் தமிழ் திரையுலகில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதும் நமக்குத் தெரியும். எதன் காரணமாக திடிரென்று நடிகர் விஜய்க்கு “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டம் தர இவ்வாறு முனைப்பு காட்டியது என்று விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டோம். அந்த குறிப்பிட்ட வார இதழின் விற்ப்பனை அதள பாதாளத்திற்குள் சென்றுவிட்டது அதை மீட்டு அதிக விற்ப்பனை செய்ய யோசனையில் இருந்தபோதுதான் இந்த “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ திட்டத்தை கையில் எடுத்தது.

இதை ஆரம்பிக்கும்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். அந்த குறிப்பிட்ட வார இதழ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள் அதற்கு “ சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது ரஜினிகாந்தின் சொத்தோ அல்லது ‘ அடுத்த சூப்பர்ஸ்டார் ‘ பட்டம் குறித்த வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை “ என்று காட்டமாகவே பதில் வந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அந்த குறிபிட்ட வார இதழுக்கு எதிராக ஆதரவு திரட்டினார்கள் அதில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் அடக்கம். இதனால் அப்போது அந்த திட்டத்தை கைவிட்டது.

இருந்தும் மறுபடியும் இந்த திட்டத்தை செயல்படுத்தி அவர்களாகவே நடிகர் விஜய்தான் “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ அறிவித்தது. ஆனால் இதில் உண்மையாக வெற்றி பெற்றது அஜித்தான், அவர்தான் அதிக வாக்குகள் பெற்றார் என்று என்ற செய்தியும் வந்தது. ஆனால் நடிகர் விஜய் இந்த வாக்கெடுப்புக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றுத்தெரியவில்லை மாறாக தன்னை “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ தேர்ந்தெடுத்த குறிபிட்ட வார இதழுக்கு நன்றி என்று அறிக்கையில் கூறியிருந்தார்.

அங்கேதான் இந்த பிரச்சினை சூடு பிடித்தது, அந்த வார இதழ் நிர்வாகம் உடனே சுதாரித்துக்கொண்டு காரியத்தில் இறங்கி மதுரையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விழா எடுத்து “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டம் வழங்க முயற்சி செய்ததது. இந்த முயற்சியில் மண் விழுந்த கதையாக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிகழ்வோடு இந்த பிரச்சினை அடங்கியிருக்கிறது ஆனாலும் உள்ளுக்குள் இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது.

இதில் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்


ஒரு பேருந்து, ஒரு விமானத்திற்கு சமமில்லை அதேபோல் ஒரு விமானம், ஒரு பேருந்துக்கு சமமில்லை, ஆகாயத்தில் செல்ல விமானம்தான் பயன்படும் சாலையில் செல்லல பேருந்துதான் பயன்படும் ஆனால் இரண்டும் ஒன்றுகொன்று சளைத்ததும் அல்ல.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் M.G.R-ருக்கு ரஜினி சமமில்லை, ரஜினிக்கு விஜய் சமமில்லை, விஜய்க்கு சூர்யா சமமில்லை, சூர்யாவுக்கு தனுஷ் சமமில்லை மேலும் தனுஷ்க்கு சூர்யா சமமில்லை, சூர்யாவுக்கு விஜய் சமமில்லை, விஜய்க்கு ரஜினி சமமில்லை, ரஜினிக்கு M.G.R-ம் சமமில்லை.

இங்கே திறமை இல்லாதோர் யாருமில்லை. ஆதலால் ரசிகர்கள் இந்த சச்சரவுகளுக்கு இடம் தராமல் மூன்றாவது நபர் சுய லாபம் தேடிக்கொள்ள உதவி புரியாமல் நல்ல சினிமாக்களை ஆதரிக்க வேண்டும் தங்கள் விருப்ப நடிகர்கள் படங்களையும் ஆதரிக்க வேண்டும்.

‘எல்லா படத்திலயும் சொத்தை எழுதி கொடுக்கிற மாதிரியே நடிச்சு சொத்து சேர்த்திடுவாரு நம்ம தலைவரு’

‘எல்லா படத்திலயும் சொத்தை எழுதி கொடுக்கிற மாதிரியே நடிச்சு சொத்து சேர்த்திடுவாரு நம்ம தலைவரு’ இது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கலக்கும் ரஜினியைப் பற்றிய கமென்ட்.

லிங்கா படத்தைப் பற்றி ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே இந்த படம் உலா வருகிறது. லிங்கா வெளியான மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். அதே சமயம் லிங்காவின் தெலுங்கு உரிமை சுமாராக 30 கோடிகளுக்கு விலைபோனது. இது எந்திரனைவிட அதிகம். லிங்கா வெளியான முதல்நாள் ஆந்திரா முழுவதும் சேர்த்து 4 கோடியையே படம் வசூலித்துள்ளது.

படம் சரியில்லை என்ற விமர்சனம் காரணமாக இரண்டாவது நாளிலிருந்தே கூட்டம் குறையத் தொடங்கியது. வார நாட்களில் வசூல் இன்னும் மோசமடையும் என்பதால் அசலையாவது படம் எடுக்குமா என்ற நிலைக்கு படத்தை வாங்கியவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மற்ற தமிழ் நடிகர்களின் படங்களைவிட மிக அதிகம்தான் லிங்கா வசூலித்துள்ளது.

ஆனாலும் அதற்கு தரப்பட்டது மிகமிக அதிக விலை என்பதால் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் 720 தியேட்டர்களில் லிங்கா வெளியானது. நள்ளிரவு 1 மணிமுதல் திரையிடப்பட்டது படம். 8 காட்சிகள் கூட திரையிடப்பட்டதாம். டிக்கெட் 300 ரூபாய் 400 ரூபாய்க்கு கூட விற்பனை செய்யப்பட்டதாம்.

இதன் காரணமாகவே மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூல் என்கின்றனர் உண்மை அறிந்தவர்கள். ஆனால் அரசுக்கு இந்த தொகை சரியாக கணக்கு காட்டப்படுமா என்றும் கேட்கின்றனர்.

விமர்சிக்க கூடாதா?

மனிதராக பிறந்தவர்கள், அதுவும் பொதுவாழ்க்கையில் நுழைந்தவர்கள் அனைவருமே விமர்சனத்திற்கு உரியவர்கள்தான். 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து படம் பார்த்த சினிமா ரசிகர்கள் ரஜினியின் லிங்காவை விமர்சித்து  கொண்டுதான் இருக்கின்றனர்.

சொத்து எழுதி வச்சிடுவாரு

ஊருக்காக தனது சொத்துக்களை எழுதி வைப்பதை முத்து காலத்தில் இருந்தே செய்து கொண்டிருக்கும் ரஜினி இன்னமும் ஒருவாய் சாப்பாடு கூட ரசிகர்களுக்காக போட்டதில்லை என்பதே உண்மை அதுவே விமர்சனத்திற்கு ஆளாகிறது.

சம்பாதிக்கும் ரஜினி

படத்திற்கு படம் சொத்தை எழுதி வைத்துவிடுவதாக காண்பித்தாலும், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது என்னவோ ரஜினிதான் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

அரசியல் பேச்சு ஏன்?

அதேபோல ரஜினியைத் தவிர அவரைச்சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவரை அரசியலுக்கு அழைக்கின்றனர். ஆனால் அவரோ தனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்கிற ரீதியிலேயே பேசுவதால் ரஜினி ரசிகர்களே சோர்வடைகின்றனர் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள்.

காப்பியடித்த காட்சிகள்

இதைவிட இந்த படத்தில் எந்தெந்த காட்சிகள் காப்பியடிக்கப்பட்டன. சிவந்த மண் படத்தில் இருந்துதான் லிங்காவின் கிளைமாக்ஸ் காப்பியடிக்கப்பட்டது என்றும் உலாவருகின்றன.

யாருமே தப்பமுடியாது

பேஸ்புக்ல அடிக்கணும்னு ஆரம்பிச்சா லிங்குசாமியாவது லிங்காவாவது எல்லாருமே ஒண்ணுதான் நம்ம ரசிகர்களுக்கு என்ன நான் சொல்றது?

பள்ளிகளுக்கு கிருஸ்துமஸ் விடுமுறை ரத்தாகிறதா! நடப்பது என்ன..?

கிருஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று பள்ளிகளுக்கு வழக்கம் போல விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய மனித

 டிசம்பர் 25-ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என நவோதயா பள்ளிகளுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

 இதற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கிருஸ்துவசமுதாய மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் இதனை மறுத்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, அன்றைய தினம் நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனையொட்டி திட்டமிடப்பட்டுள்ள கட்டுரைப்போட்டி, இணையதளம் வழியாகவே நடத்தப்படும் என்றும் பங்கேற்கும் மாணவர்கள் கட்டுரை போட்டியில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் ஆதரமற்ற செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினத்தை குரு உத்சவ் தினமாக கொண்டாட சுற்றறிக்கை அனுப்பியதற்கும், 6ஆம் வகுப்பு மாணவர்கள் சமஸ்கிருதம் அவசியம் கற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதற்கும் கண்டன குரல்கள் எழுந்தன.

தற்போது கிருஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று விடுமுறை இல்லை என்று கூறப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.