Thursday, December 11, 2014

துணை நடிகையின் பிறந்த நாளை கொண்டாடிய ரஜினி: புது தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் நாளை வெளிவருகிறது. கடந்த 6 மாதமாக படப்பிடிப்பில் இருந்த ரஜினி முன் எப்போதையும் விட சக கலைஞர்களுடன் நெருக்கமாக பேசி மகிழ்ந்திருக்கிறார். அந்த தகவல்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது. லிங்கா படத்தில் சோனாக்ஷி சின்ஹாவின் தோழியாக நடித்த ஒரு துணை நடிகையின் பிறந்த நாளை கூட கேக் வெட்டி, ஊட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

சுசித்ரா சிவராமன் என்ற அந்த நடிகை குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாகி இருக்கிறார். ஆதி படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமாகி அய்யனார், வேட்டைக்காரன், ஆதவன் உள்பட 15 படங்களில் நடித்துள்ளார். தற்போது லிங்காவில் சோனாக்ஷி சின்ஹாவின் தோழியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பின் போது அவரது பிறந்த நாள் பற்றி கேள்விப்பட்டு அவரை அழைத்து எல்லோர் முன்னிலையிலும் கேக் வெட்டி அதனை அவருக்கு ஊட்டி ஆசீர்வத்திருக்கிறார் ரஜினி. அதை தன் வாழ்நாள் பாக்கியமாக கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் சுசித்ரா சிவராமன்.

சல்லிக்காசுக்குக்கூட தேறாத படங்கள் எல்லாம் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில்…!

சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்படவிழாக்கள் எல்லாம் பெயருக்குத்தான் ‘சர்வதேச’ திரைப்படவிழா.

உண்மையில் தனி நபர்களும், தனி நபர்கள் நடத்தும் அமைப்புகள் சார்பாகவும் நடத்தப்படும் சாதாரண பட விழாக்களே அவை.

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல், தகுதியான அமைப்புகள் இல்லாததினால் தனி நபர்கள் திரைப்படவிழாக்களை நடத்துகின்றனர்.

சில வெளிநாட்டுப்படங்களை வர வைத்து திரையிட்டுவிட்டு ‘சர்வதேச’ என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டு பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இண்டோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு கடந்த 11 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடமும், தமிழக அரசுடன் நெருக்கமாக இருக்கும் திரைப்பட பிரமுகர்களை அருகில் வைத்துக் கொண்டு அரசாங்கத்திடமிருந்து லட்சக்கணக்கில் நிதி உதவியையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த ஆண்டு, 12-ஆவது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 18-ஆம் தேதி துவங்கி 25-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே தமிழக அரசிடமிருந்து 50 லட்சம் மீட்டர் போட திட்டமிட்டுள்ளனர்.

இந்த ‘சர்வதேச’ பட விழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், ஆஸ்திரேலியா, போலந்து, பிரேசில், பல்கேரியா, உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

இந்தியன் பனோரமா பிரிவில் 17 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இவற்றில், ‘மெட்ராஸ்’, ‘என்னதான் பேசுவதோ’, ‘கதை திரைக்கதை வசனம், இயக்கம்’, ‘குற்றம் கடிதல்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சலீம்’, ‘சிகரம் தொடு’, ‘தெகிடி’, ‘வெண்நிலா வீடு’, ‘பூவரசம் பீப்பி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சதுரங்கவேட்டை’ ஆகிய 12 படங்களை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

இந்தப் பட்டியலைப் பார்த்த திரைப்படத்துறையினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அது மட்டுமல்ல, திரைப்பட விழாவை நடத்துபவர்களின் ரசனை குறித்தே சந்தேகம் எழுந்திருக்கிறது.

உண்மையிலேயே சினிமா அறிவு உள்ளவர்கள்தானா இவர்கள்? என்ற கேள்வியும்தான்.

காரணம், கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் என பல தரப்பினராலும் பாராட்டப்பட்ட கோலிசோடா, சண்டியர், குக்கூ, ராமானுஜன், ஜீவா, சைவம், காடு ஆகிய படங்கள்.

இந்த படங்கள் எதுவுமே திரைப்படவிழாவில் திரையிட தேர்வு செய்யப்படவில்லை.

சற்றே வித்தியாசமான முயற்சியாக கவனத்தை ஈர்த்த ர, உன் சமையலறையில், மஞ்சப்பை போன்ற படங்களும் பட்டியலில் இல்லை.

தகுதியான படங்களை தேர்வு செய்யாமல் சல்லிக்காசுக்குக்கூட தகுதியில்லாத படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று விமர்சனம் எழுந்துள்ளது.

அதோடு, சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் படங்களை திரையிட அதன் நிர்வாகி ஒருவர் பெரும் தொகையை கேட்பதாகவும், பணம் கொடுத்தால் குப்பைப் படத்தைக் கூட பட்டியலில் சேர்த்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி பணம் கொடுத்து சில படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்.

இதன் காரணமாக, சென்னை திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு 50 லட்சம் வழங்கக் கூடாது என்ற முதல்வருக்கும் கோரிக்கை வைக்கவும், அதையும் மீறி வழங்கப்பட்டால் வழக்குத் தொடரவும் உள்ளனர்.

திரௌபதிக்கு ஏன் 5 கணவர்கள் என்பது பற்றிய சில அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!!!

நம் அனைவருக்கும் மகாபாரதம் நன்றாக தெரியும்; அதில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பதும் தெரியும். ஆனால் அவருக்கு ஏன் ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பாண்டவர்களையும். கௌரவர்களையும் மையமாக வைத்து தான் மகாபாரதத்தின் கதை சுழல்கிறது. மகாபாரதத்தில் நடைபெற்ற குருஷேத்ர போரின் போது, உச்ச நிலைக்கு சென்ற பல நிகழ்வுகளை இந்த காவியம் விளக்குகிறது. மிகப்பெரிய இந்த காவியத்தில், குருஷேத்ர போரில் சண்டையிட்ட ஆண் கதாபாத்திரங்களைப் பற்றி வீரமுள்ள பல கதைகள் உள்ளது.

அவர்கள் வாழ்வார்களா, மாட்டார்களா என்பதை அந்த கதைகள் நமக்கு கூறும். இந்த புராணத்தில் மற்றொரு முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்றும் உள்ளது. மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய குருஷேத்ர போர் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததும் இவரே. ஆம், நாம் பேசிக்கொண்டிருப்பது திரௌபதி பற்றி தான்.
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: காந்தாரிக்கு உண்மையிலேயே 101 குழந்தைகள் இருந்தார்களா?

இந்த புராணம் முழுவதும் மிக சக்தி வாய்ந்த பாத்திரமாக இருந்து வந்துள்ளார் திரௌபதி. பஞ்சால ராஜ்யத்தின் இளவரசியான திரௌபதி, பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் மனைவியாக இருந்துள்ளார். மேலும் மிகப்பெரிய அறிவாற்றல் மற்றும் தன் கணவர்களிடம் மிகுந்த பக்தியை கொண்ட ஒரு புதிரான பெண்மணியாக அவர் விளங்கினார். திரௌபதியைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ஈர்க்கும் விதமாக இருக்கும். அவருடைய அழகு, பெருமை, பக்தி, காதல், அவரடைந்த அவமானம் மற்றும் அவரின் சபதம் பற்றிய அனைத்து கதைகளை கேட்கும் போதும் நம்மை மதிமயக்க செய்து விடும்.
இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

ஆனால் சகோதரர்களாகிய ஐந்து ஆண்களுக்கு மனைவியாக இருந்தது எப்படி இருந்திருக்கும்? ஆனால் பூர்வ ஜென்மத்தில் வாங்கிய வரத்தால், இந்த ஜென்மத்தில் ஐந்து கணவர்களுக்கு மனைவியாக வேண்டும் என்று ஏற்கனவே அவருக்கு விதி எழுதப்பட்டிருந்தது. திரௌபதிக்கு ஏன் ஐந்து கணவன்கள் என்பதைப் பற்றி விவரமாக தெரிந்து கொள்வோமா?

தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் ஒரு துறவிக்கு மகளாக பிறந்தார் திரௌபதி. தனக்கு திருமணமாகாத காரணத்தினால் அவர் வருத்தமாக இருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் சிவபெருமானை நினைத்து கடுமையான தவத்தில் ஈடுபட்டார். பல வருட தவத்திற்கு பின்னர் மனம் குளிர்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி அவருக்கு வரம் ஒன்றை அளித்தார். ஐந்து குணங்கள் அடங்கிய கணவனை அவர் வரமாக கேட்டார்.
தன் கணவனுக்கு ஐந்து குணங்கள் இருக்க வேண்டும் என திரௌபதி கேட்டார். முதல் குணம் – ஒழுக்க நெறியுடன் வாழ்பவர். இரண்டாவது – வீரம் நிறைந்தவராக இருத்தல். மூன்றாவது – அழகிய தோற்றத்துடன் கூடிய ஆண்மகன். நான்காவது – அறிவாளியாக இருத்தல். ஐந்தாவது – அன்பும் பாசமும் கொண்டவராக இருத்தல்.

சற்று நேரம் சிந்தித்த சிவபெருமான், இந்த ஐந்து குணங்களும் ஒரே ஆணிடம் இருக்க சாத்தியமில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் இந்த ஐந்து குணங்களை தனித்தனியாக கொண்ட ஐந்து ஆண்களுக்கு மனைவியாகும் வரத்தை அவர் திரௌபதிக்கு அளித்தார். அதனால் அடுத்த ஜென்மத்தில் துருபத மகாராஜாவிற்கு அவர் மகளாக பிறந்த போது, ஐந்து சகோதரர்களை மணக்க வேண்டும் என ஏற்கனவே எழுதப்பட்ட விதியோடு தான் அவர் பிறந்தார்.

புராணத்தை சற்று ஒதுக்கி வைத்து பார்த்தால், அக்காலத்தில் ஒரு பெண் பல கணவர்களை மணந்து கொள்ளும் பழக்கத்தையும், ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்ளும் பழக்கத்தையும் நாம் ஒதுக்கி விட முடியாது. திரௌபதி விஷயத்தில், அதாவது ஒரு பெண் பல ஆண்களை மணப்பதற்கு இப்படி காரணங்களை கூறலாம் – இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இன்றைய திதி வரை, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில், ஆண்களை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பழங்கால அஸ்தினாபூரும் இந்த வட்டாரங்களை ஒட்டியே அமைந்துள்ளது. அதனால் மணப்பெண்களின் எண்ணிக்கைகள் குறைவாக இருந்த காரணத்தினால் திரௌபதி ஐந்து ஆண்களை திருமணம் செய்ததற்கான வாய்ப்புகள் உள்ளது.

சுயம்வரம் முடிந்து திரௌபதியுடன் வீட்டிற்கு திரும்புகையில், தன் தாயிடம் அர்ஜுனன் வேண்டுமென்றே முதலில் இப்படி கூறுகிறார் “நாங்கள் கொண்டு வந்திருப்பதை பாருங்கள் அன்னையே”. அர்ஜுனன் எதை குறிப்பிடுகிறார் என பெரிதாக யோசிக்காமல், கொண்டு வந்ததை சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு குந்தி தேவி கூறினார். தன் தாயின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தில், திரௌபதியை ஐந்து பேரும் தங்களின் மனைவியாக ஏற்றுக் கொண்டனர். புறநிலையாக இதை பார்த்தோமானால், போர் வரும் நேரத்தில் போரில் ஜெயித்திட தன் புதல்வர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என குந்தி தேவி விரும்பினார். அதற்கு காரணம் போர் வரும் என அவர் எதிர்பார்த்திருந்தார். திரௌபதியின் எழில் கொஞ்சும் அழகு தன் புதலவர்களை பிரித்து விடும் என அவர் எண்ணினார். அவள் மீது அனைவரும் கொண்ட காமத்தை அவர் கண்டார். அதனால் குந்தி தேவி செய்தது மிகவும் வினைமுறைத் திறத்துடன் கூடிய விஷயமாகும். திரௌபதிக்காக சண்டையிடக் கூடாது என்ற காரணத்தினால் திரௌபதியை பகிர்ந்து கொள்ளுமாறு தன் புதல்வர்களிடம் கூறினார்.

பலாத்காரம் எங்க அவமானம் இல்லை, உங்க அவமானம்.. மோடி, சச்சினுக்கு நடிகையின் பகிரங்க கடிதம்!

டிராவல் ரைட்டர், நடிகை , மாடல், என பலமுகம் கொண்டவர் ஷெனாஸ் டிரசரிவாலா. இப்போது மெய்ன் ஆர் மிஸ்டர் ரைட் என்ற படத்தில் பரூன் சோப்தி என்பவருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் புரோமோவில் பிசியாக இருக்கிறார் ஷெனாஸ். அவரை உபேர் டாக்சி பாலியல் பலாத்கார சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

 கூடவே இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களும் அவரை பாதிக்கவே, பிரதமர் நரேந்திர மோடி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர்கான், தொழிலதிபர் அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் ஷெனாஸ்.

அந்தக் கடிதத்தை படியுங்களேன்:

 அன்பிற்குரிய நரேந்திர மோடி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர்கான், அனில் அம்பானி, நீங்கள் நாட்டின் முன்னணியான, சக்தி வாய்ந்த ஆண்கள் என்ற அடிப்படையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.


 மும்பையில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் என்ற அடி்பபடையில் இதை எழுதுகிறேன். உங்களது உதவி கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனது பெற்றோர்கள் இதை விரும்ப மாட்டார்கள். இதை அவர்கள் படிக்க நேர்ந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் இது எனது அவமானமல்ல. அவர்களது அவமானம்தான். நான் 13 வயதாக இருந்தபோது பாலியல் அக்கிரமத்தை சந்திக்க நேரிட்டது. ஒரு ஆண் (அவனது முகத்தை நான் பார்த்தது கூட கிடையாது, ஆனால் அவனது கையை என்னால் மறக்க முடியாது) என்னைத் தொட்டு அக்கிரமம் செய்தான். எனது தாயாருடன் காய்கறிக் கடைக்குப் போய்க் கொண்டிருந்தபோது அந்த செயலை அவன் செய்தான்.

 எனது தாயார் எனக்கு அப்போது செய்திருந்த ஹேர்கட் மோசமாக இருந்தது. நான் ஒரு கோபக்கார இளம் பெண்ணாக அப்போது இருந்தேன். நான் கோபமாக எனது தாயாரைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். நான் அப்போது அணிந்திருந்த ஆடை கூட எனக்கு ஞாபகம் உள்ளது. அது எனக்குப் பிடிக்காத டிரஸ். ஆனால் அந்த ஆடையை குறை சொல்லிப் புண்ணியமில்லை. என்னை அந்த நபர் தொட்டு சீண்டியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். பேசக் கூட முடியவில்லை. அவன் ஓடி விட்டான். நான் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டேன். எனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. எனது தாயாரிடம் நடந்ததைச் சொன்னேன்.


அவர் கத்திக் கூச்சல் போட்டார். ஆனால் தவறு செய்தவன் தான் ஓடிப் போய் விட்டானே. அந்த அசிங்கமான உணர்வு எனக்குள் இன்னும் இருக்கிறது. நான் வீட்டுக்கு வந்து குளியலறையில் பலமுறை குளித்தும் கூட அந்த நினைவு போகவில்லை. அதன் பிறகு அது தொடர்ந்தது. இதை நான் எனது பெற்றோரிடம் கூறினேன்.

எனது தாயார் புரிந்து கொண்டார். ஆனால் எனது தந்தையும், சித்தப்பா, பெரியப்பாக்களும் நான் சும்மா கற்பனை செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள். அந்தப் பிரச்சினையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் 15 வயதாக இருந்தபோது, செயின்ட் சேவியர் கல்லூரிக்கு தினசரி பேருந்தில்தான் செல்வேன்.

அப்போது பலமுறை என்னை பல ஆண்கள் உடலைத் தொட்டுள்ளனர், தடவியுள்ளனர், உரசியுள்ளனர். தொடாத இடம் இல்லை. இப்படித்தான் நான் வளர்ந்தேன். நான் மட்டுமல்ல, வசதியான கார்களும், கார்களை ஓட்ட டிரைவர்கள் வசதியும் இல்லாத என்னைப் போன்ற பல இந்தியப் பெண்கள் இப்படித்தான் வளர்கிறார்கள்.

பதின் பருவப் பெண்ணாக இருந்த போது நான் பல கனவுகளைக் கண்டேன். என்னைத் தொட்டுத் தடவியவர்களை மெஷின் கன்னால் சுட்டுத் தள்ள வேண்டும் என்று கூட கனவு கண்டேன். ஒரு சிறுமியின் வயதில் அத்தகைய கனவு எவ்வளவு கொடுமையானது. உங்களால் அதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? நான் மாடலாக மாறியபோது,

பல ஸ்கிரீன் டெஸ்ட்டுகளுக்குப் போக வேண்டியிருந்தது. அழகாக ஆடை உடுத்திக்கொண்டு நான் போக வேண்டியிருந்தது. ஒரு ஆடிஷனுக்கு நான் போயிருந்தபோது சிவப்பு நிற பாடி சூட்டில் போயிருந்தேன். கருப்பு நிற லாங் ஷர்ட்டும், ஸ்லிட்டுகளும் அடங்கியது அது. அது நரகம். அதை நான் மறுபடியும் அணியவே இல்லை. அதன் பின்னர் என்னைக் காத்துக் கொள்ள நானே கற்றுக் கொள்ள வேண்டி வந்தது.

என்னிடம் எப்போதும் ஒரு பை இருக்கும். வளர வளர நான் சுதாரிக்க ஆரம்பித்தேன். எனக்குப் பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொள்வேன். என்னைத் தொட்ட சிலரை நான் அடித்து கூட இருக்கிறேன். சில நேரம் பொதுமக்கள் என்னைக் காப்பாற்றியுள்ளனர்.


ஆனால் பலமுறை நானேதான் போராட வேண்டியிருந்தது. உன்னை யாராவது தொட்டால், சீண்டினால் சண்டை போடாதே என்று எனது தாயார் என்னிடம் கெஞ்சுவார். அவர் பயப்படுவார். யாராவது ஆசிட் ஊற்றி விட்டால் என்னாவது என்று அவரு்க்குப் பயம். இன்னும் கூட அவர் பயப்படுகிறார். உபேர் டாக்சியில் போகாதே என்று இப்போது கூறுகிறார். கொடுமை. உபேர் டாக்சியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.

எனது சகோதரி சோபியா கல்லூரியில் சேர்ந்தபோது முதல் நாள் கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது விடாமல் அழுதாள். என்ன என்று கேட்டபோது, ஒரு ஆண், அவளது டி சர்ட்டின் கைப் பகுதி வழியாக கையை விட்டு சில்மிஷம் செய்ததாக கூறினாள். பேருந்து பயணம் முழுவதும் அவனது சில்மிஷம் தொடர்ந்துள்ளது. அவள் அப்படியே உறைந்து போயிருந்தாள். அவள் குழந்தை.

என்ன நடக்கிறது என்று கூட அவளுக்குப் புரியவில்லை. இதைச் சொன்னதற்காக எனது தங்கையிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் வேறு வழியில்லை. இது நமது அவமானம் இல்லை. அவர்களது அவமானம். எனது கல்லூரித் தோழி ஒருநாள், வீடு திரும்பியபோது பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் ரயிலில் பயணம் செய்தபோது பலாத்காரம் செய்யப்பட்டாள்.

அவளைக் காக்க யாரும் வரவில்லை. அது சூப்பர் பாஸ்ட் ரயில். பல இடங்களில் அது நிற்காது. பெட்டியில் அவள் மட்டும்தான் இருந்தாள். அதை சாதமாக பயன்டுத்தி பலாத்காரம் செய்து விட்டனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவள் பந்த்ரா ரயில் நிலையம் வந்து சேர்ந்தாள். அவளுக்கு வயது 16தான். இதை யாரிடமும் அவள் சொல்லவில்லை.

ஆனால் அது அவளது அவமானம் அல்ல, அவர்களது அவமானம். ஹைதராபாத்துக்கு படப்பிடிப்புக்குப் போன போது எனது தாயார் உடன் வந்தார். சூரி பஜாரில், ஒரு சைக்கிளில் போன ஆண், எனது தாயாரைத் தொட்டுத் தடவி சில்மிஷம் செய்தான். என் அன்புக்குரிய தாயாருக்கு நேர்ந்த கதி அது. மன்னித்து விடு அம்மா, இது நமது அவமானம் அல்ல, அவர்களது அவமானம்.

எனது பெர்சனல் சம்பவங்களை நான் ஏன் கூறுகிறேன்.?

அனைத்துப் பெண்களும் வெளிப்படையாக பேச வேண்டும். இதை நமது கொள்கையாக மாற்றுவோம். இது நமது அவமானம் அல்ல, அவர்களது அவமானம்.

"அவர்கள்" யார் ..? "

அவர்கள்" - இந்த நாட்டின் ஆண்கள். இந்த பாலியல் பலாத்கார குற்றவாளிகளும், பெண்களை உரசுவோரும், தடவுவோரும், ஏன், நமது தந்தைகளும், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், சகோதரர்கள், சினிமா நடிகர்கள், கிரிக்கட் வீரர்கள், அரசியல்வாதிகள்.. யாரெல்லாம் நம்மைக் காக்கத் தவறுகிறார்களோ அத்தனை ஆண்களும்,

 குற்றவாளிகள்தான். ஏன் பெண்களை இவ்வளவு தூரம் இவர்கள் விரட்டி விரட்டி மிரட்ட வேண்டும். ஏன் யாருமே நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஏன் கடுமையான தண்டனை தரப்படுவதில்லை. இது பல காலமாக நடந்து வருகிறதே.. டெல்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடக்கிறது.

மும்பையிலும் நடக்கிறது, பிற ஊர்களிலும் நடக்கிறது. பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை, நிச்சயமாக இல்லை. இப்போதும் கூட எனக்குப் பாதுகாப்பு இல்லை. யோகா முடிந்தோ, ஷூட்டிங் முடிந்தோ இரவில் நான் தனியாகச் சென்றால், பத்திரமாக போய்ச் சேருவேன் என்பது உத்தரவாதம் இல்லை.

நானும் பலாத்காரம் செய்யப்படலாம். எனக்குப் பாதுகாப்பு இல்லை. இன்னும் நான் பாதுகாப்புடன்தான் செல்ல வேண்டியுள்ளது. நாம் டெல்லியைப் பற்றிப் பேசுவோம். 2 நாட்களுக்கு முன்பு நான் அங்கு இருந்தேன். உபேர் டாக்சி டிரைவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த அன்று நான் அங்கு இருந்தேன். இந்தியா கேட்டுக்கு வாங்கிங் செல்ல விரும்பினேன்.

ஆனால் என்னால் போக முடியவில்லை. ஏன்..?? பிரதமர் அவர்களே, நீங்கள் அமெரிக்காவிலும், ஜப்பானிலும், ஆஸ்திரேலியாவிலும் நன்றாகப் பேசினீர்கள். ஆனால் டெல்லியில் பட்டப் பகலில் கூட ஒரு பெண்ணால் பாதுகாப்பாக போக முடியாவிட்டால், அது யாருடைய அவமானம். உங்களது அவமானம் சார் அது.

இதுதான் நமது முதல் பிரச்சினை. இதை முதலில் சரி செய்யுங்கள். இது அவமானம், உங்களது அவமானம். நீங்கள்தான் இதற்குப் பொறுப்பு. நீங்கள் சக்தி வாய்ந்த ஆண்கள். தவறு செய்தவர்களை, பெண்களைத் தடவுபவர்களை கடுமையாக தண்டியுங்கள். அவர்களைக் கொல்லுங்கள். பொது இடத்தில் அவர்களை நிறுத்தி அவர்களது ஆணுறுப்பைத் துண்டியுங்கள் என்று நான் கேட்க மாட்டேன்.

ஆனால் அதைத்தான் நானும் சரி, அனைத்துப் பெண்களும் சரி விரும்புவார்கள். ஆனால் இது நிஜத்தில் நடக்க முடியாதது. அவர்களுக்கு மரண தண்டனை கொடுங்கள். விரைவாக கொடுங்கள். அதுவம் கொடுமையானதாக இருந்தால் ஆயுள் தண்டனையாவது கொடுங்கள். அவர்களை நிரந்தரமாக சிறையில் அடையுங்கள். உங்களைப் போல நான் பெரியவள் இல்லைதான்.

ஆனால் எங்களைக் காக்க எதைச் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். எங்களைக் காப்பாற்றுங்கள், அவர்களுக்கு ஜாமீனே கொடுக்காதீர்கள் தண்டியுங்கள். சூப்பர் ஸ்டார்களே, உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். ஒரு நிலை எடுங்கள். உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, பணத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டின் பெண்களைக் காப்பாற்றுங்கள். நீங்கள் போராட வேண்டும். உண்ணாவிரதம் இருக்க வேண்டும். ஏதாவது செய்யவேண்டும்.

மரியாதையுடன்,

ஷெனாஸ் டிரசரிவாலா.

ரஜினியை விமர்சனம் செய்த முகநூல் கணக்கு முடக்கப்பட்டது!

தமிழில் மாற்று சினிமா வர வேண்டும் என்ற எண்ணத்தில் ‘தமிழ் ஸ்டூடியோ’ நடத்தி வருபவர் அருண். இவர் ‘பேசாமொழி’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தி வருகிறார்.

அருண் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கடுமையாக விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்ததால் அருண் தமிழ் ஸ்டூடியோ கணக்கை முகநூல் நிர்வாகம் முடக்கி விட்டது.

இது தொடர்பாக அருண் வெளியிட்டுள்ள செய்தி: “அருண் தமிழ் ஸ்டுடியோ முக்கிய அறிவிப்பு.நண்பர்களே! ரஜினிகாந்த், ‘காவியத் தலைவன்’ பற்றிய என்னுடைய பதிவிற்காக மிக பரவலான புகார் முகநூல் நிர்வாகத்திற்கு சென்றிருக்கிறது. அதனால் என்னுடய அருண் தமிழ் ஸ்டுடியோ கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. எனவே இனிஎன்னுடைய அருண் தமிழ் ஸ்டுடியோ பக்கத்தில்தான் நான் எழுத முடியும் என்று முகநூல் நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.”

அருண் தமிழ் ஸ்டுடியோ முகநூல் கணக்கு முடக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர் ஜெயச்சந்திர ஹஸ்மி கூறியிருப்பதாவது:-

இரண்டு நாட்களாக ரஜினிகாந்தைப் பற்றிய ஒரு விமர்சனப் பதிவை எழுதியதற்காக தோழர் அருண் தமிழ் ஸ்டூடியோ அவர்களின் முகநூல் பதிவு முடக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அந்த பக்கத்தை ரிப்போர்ட் செய்ததால் ஃபேஸ்புக் நிர்வாகம் இதனை செய்துள்ளது.

அவர் எழுதியது சரியா தவறா என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் அதற்காக அந்த கணக்கையே முடக்குவது எப்படி சரியான பதிலடியாக இருக்கும்? எந்த ஒரு விஷயத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்தினால்தான் அந்தந்த துறையிலும் யாரும் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். விமர்சனங்களுக்கு அஞ்சுபவர்களை நிச்சயம் கோழைகள் என்பதன்றி வேறென்ன சொல்ல? குறிப்பட்ட அந்த பதிவை மட்டுமல்லாது அவரது மொத்த முகநூல் கணக்கையே முடக்குவது என்பது முகநூல் வன்முறையின் உச்சம்.

அருண் கேட்டிருந்த கேள்விகளுக்கும் வைத்திருந்த விமர்சனங்களுக்கும் ரஜினி பிரியர்களால் பதிலளிக்க முடிந்திருந்தால், அல்லது அதற்கான நியாயமான எதிர்வினை புரிந்திருந்தால் நிச்சயம் இதுவொரு ஆரோக்கியமான விவாதமாகவே சென்றிருக்கும். அதுபோன்ற சில காட்டமான பதில்களையும் அந்த பதிவில் பார்த்தேன். பிறகேன் இப்படியொரு கூட்டு நடவடிக்கை என்று தெரியவில்லை.

ஆனால், அந்த பதிவிற்கான பழிவாங்கலாக இத்தனை வருடமாக அவரது அத்தனை உழைப்பும் செயல்பாடுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அந்த முகநூல் கணக்கையே முடக்குவது மிகவும் மோசமான ஒரு முன்னுதாரணமாக அமையும்.

பொதுவில் ஒருவரையோ ஒரு படத்தையோ விமர்சனம் செய்யக்கூடாது என்றால், அந்த படத்தை நீங்கள் மட்டும் உங்கள் வீட்டு டிவியில் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நிஜத்தில் எப்படியோ, ஆனால் திரையில் எதிரிகளை தைரியமாக தொடை தட்டி எதிர்கொண்டு வெல்லும் ரஜினியின் ரசிகப் பெருமக்கள் இதுபோன்ற ஒரு முதுகில் குத்தும் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது நிச்சயம் அவனமானமான ஒரு விஷயம்.

மற்றபடி ‘எங்க தலைவரை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுனா என்ன நடக்கும்னு இப்ப தெரியுதா?’ என்று இதை செய்தவர்கள் காலரைத் தூக்கி கொண்டு வெற்று பந்தா அடிப்பார்களானால், மீண்டும் சொல்கிறேன், அத்தனை கோழைகளைத்தான் ரஜினி சம்பாதித்திருக்கிறாரா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அருண் மேல், அவரின் விமர்சனங்களின் மேல் உங்களுக்கு எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நிச்சயம் புறந்தள்ள முடியாது.

 இவ்வாறு ஜெயச்சந்திர ஹஸ்மி கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்டுள்ள கண்டனம் வருமாறு:

When I heard that my friend Arun who runs Tamil Studio, an independent movement for alternative cinema got hounded by Rajini fans for his critical opinion on Rajinikanth and made complaints to facebook in thousands to make his page removed, i lose faith in this space as a space for free expression! Though i have myself encountered cyber violence and attacks many times, this particular instance proves that mob culture has invaded internet and they can go to any level to finish people and their opinions when different than them.

Tomorrow, my page can also be banned by some retards who can mob up in hundreds and complain facebook for my critical opinions!

And it can be YOU as well!

விட்டால் காமசூத்ராவை கூட தேசிய நூலாக அறிவிப்பார்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பகவத்கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க முடிவெடுத்துள்ள பா.ஜ.க அரசு காமசூத்ராவை கூட தேசிய நூலாக அறிவித்தாலும் அறிவிப்பார்கள், என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்,

செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தேனி வந்தார் முன்னதாக கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபம் சென்றார். அங்குள்ள பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

முல்லை பெரியாறு அணை பகுதிக்கு தமிழக அரசு அதிகாரிகள் தினசரி சென்று வருவதை கேரள வனத்துறை முட்டுக்கட்டை போட்டு தடுக்கிறது. இதனால் பணிகள் பாதிக்கப்படுகின்றன. அணையில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல் தொடர்ந்தால் கேரள-தமிழக மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒற்றுமை சீர்குலையும். இந்நிலை நீடித்தால் தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு பொய் வதந்திகளை பரப்பி வருகிறது. தற்போது அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு நன்றாக உள்ளதால் கேரள அரசின் பொய் அம்பலமாகி உள்ளது. பேபி அணையை பலப்படுத்திய பின்னர் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும்.

 இதை உச்சநீதிமன்றமே அறிவிக்கும். உதகமண்டலத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நாளை மறுநாள் அங்கு வருகிறார். அப்போது நாங்கள் அவரை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுமாறு வற்புறுத்துவோம். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒதுக்கி வைத்தார்கள்.

ஆனால் இப்போது மோடி அரசு எந்தவித நன்மையும் செய்யாததால் மக்களுக்கு மத்திய அரசு மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி மொழியை தமிழகத்தில் புகுத்த முயற்சிக்கிறது. மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் விதமாக நடந்துகொள்கிறார்கள்.

பகவத்கீதையை தேசிய புனிதநூலாக அறிவிக்க முடிவெடுத்துள்ள அவர்கள் காமசூத்ராவை கூட தேசிய நூலாக அறிவித்தாலும் அறிவிப்பார்கள். கட்சியை பலப்படுத்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது என்று இளங்கோவன் கூறினார். அவருடன் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி ஆரூண் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.