Monday, December 8, 2014

80 வயது பாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மீதேற்றிய மனிதக்கழுதைகள்

80 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மீதேற்றி கிராமத்தில், ஊர்வலமாக அழைத்துசென்று அவமானபடுத்திய சம்பவமொன்று இந்தியா, ராஜஸ்தான் மாநிலம் பில்வரா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பில்வரா மாவட்டம் கி கமேரி என்ற கிரமத்திலே இத்துர்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக் கிராமத்தைச் பஞ்சாயத்தார், மேற்படி மூதாட்டிக்கு சூனியக்காரி என்ற பட்டத்தை சூட்டியுள்ளதுடன் அவரை நிர்வாணப்படுத்தி கழுதை மீதேற்றி கிராமத்தை வலம் வரச்செய்யுமாறு கிராமத்தவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அவரிடம் யாரும் பேசக் கூடாது என்றும் மீறினால் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் பஞ்சாயத்தார் கிராமத்தவர்களுக்கு எச்சரித்துள்ளனர்.

மேற்படி மூதாட்டியின் கணவர் 37 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பிள்ளைகளின்றி வாழ்ந்து வந்த இவருக்கு கிராமத்தில் ஒரு சிறு நிலம் உள்ளது.

அந்த நிலத்தை பறிப்பதற்கு பலர் முயற்சி செய்து வந்துள்ளனர். இதற்காக அவரை கடந்த சில வருடங்களாகவே தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் தற்போது கழுதை மீது ஏற்றி ஊர்வலம் போகச் செய்து அவமதித்துள்ளனர் என்று கிராமத்தில் சிலர் கூறியுள்ளனர்.

ஒரு மாதத்துக்கு முன்பு ராஜ்சமந்த் என்ற ஊரிலும்; 50 வயதுப் பெண்ணை நிர்வாணப்படுத்தி கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச்சென்று அவமானப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எயிட்ஸ் வைரசுக்கு "பியூஸ்" போனது: வீரியம் குறைந்துவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள் !

1990 களில் இருந்து பெரும் பரபரப்பாக பேசப்படும் விடையங்களில் ஒன்று, எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி வைரஸ் தான். சரியாக உடலுறவு கொள்ள கூட முடியவில்லை. பெரும் அச்சத்தில் தவிப்பதாக பல ஆடவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் காண்டம் போடவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் தள்ளப்பட்டார்கள். இன் நிலையில் எயிட்ஸ் வைரசின் வீரியம் குறைய ஆரம்பித்துவிட்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். அப்படியா ? அப்படி என்றால் என்ன என்று அறிய உங்களுக்கு ஆவலாக இருக்கும் ....

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு , மற்றும் தற்போது வரை உயிரோடு உள்ள சிலரது ரத்தத்தில் உள்ள வைரசை எடுத்துள்ளார்கள். மற்றும் தற்போது 2014ம் ஆண்டு புதிதாக எயிட்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட சிலரின் ரத்தத்தில் உள்ள வைரசையும் எடுத்து ஆராய்ந்துள்ளார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள வைரஸ் மிகவும் ஆரோக்கியமாகவும், தற்போது பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள வைரஸ் மிகவும் வீரியம் குறைந்த நிலையிலும் உள்ளதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். அது என்ன காரணம் என்றால், வைரஸானது குட்டிபோடவேண்டும் அல்லவா ? பின்னர் அதன் குட்டி இன்னும் ஒரு குட்டி போடவேண்டும், இவ்வாறு அது இனப்பெருக்கம் செய்து, பின்னர் அது மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். பல ஆண்டுகளாக இவ்வாறு நடந்து , தற்போது உள்ள எயிட்ஸ் வைரஸ் வீரியத்தை இழந்து வருகிறது.

அதாவது ஒரு படத்தை நீங்கள் ஸ்கேன் செய்து, பின்னர் அதனை மீண்டும் புகைப்படமாக்கி பின்னர் மீண்டும் ஸ்கேன் செய்து எடுத்துக்கொண்டு வந்தால் அதன் குவாலிட்டி குறையும் தானே. அதுபோல எயிட்ஸ் வைரசின் வீரியமும் குறைந்துவிட்டது. அவ்வளவு தான். இன்னும் 20 வருடங்களில் இப்படி ஒரு வைரஸ் இருக்கிறது. பரவும். ஆனால் ஆபத்து இல்லை என்று சொல்லிவிடுவார்கள் போல இருக்கிறது. தடிமன் காச்சலை உண்டாக்கும் வைரஸ் போல இதுவும் ஒரு சாதாரண வைரசாக மறிவிட வாய்ப்பு உள்ளது. பின்னர் எமது உடலே இதனை அழிக்க ஆன்டி வைரஸை கண்டு பிடித்துவிடும்( ஷலதோஷ வைரசை எமது உடல் அழிப்பதுபோல

தாஜ்மகால் இந்து கோவிலின் ஒரு பகுதியே சர்ச்சையை கிளப்பும் பாரதீய ஜனதா

 சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி ஆசம்கான்,கடந்த நவமபர் மாதம் 13-ந்தேதி பேசும் போது  தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும். தாஜ்மகாலின் நிர்வாகி யாக என்னை நியமிக்க வேண்டும் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உத்திரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு தேஜோ மகாலய கோவில் இருந்தது. அந்த கோவில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன.


இந்த இடத்தில் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. அதில் கோவிலின் ஒரு பகுதியும் அடங்கும். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசம் கான் முதலில் வக்பு வாரிய சொத்துகளை அபகரித் தார்.

இப்போது, அவர் தாஜ்மகாலை குறி வைத்துள்ளார். தாஜ்மகாலில் 5 முறை தொழுகை நடத்த வேண்டும் என்ற அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறி னார்.


உ.பி. மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த்பாஜ் பாயின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்திய சியாசட்ட அமைப்பு தாஜ்மகால் நாட்டின் சொத்து அதை சன்னி அமைப்பிடமோ அல்லது ஷியா அமைப்பிடமோ கொடுக்கக் கூடாது. ஏற்கனவே அவர்களிடம்  உள்ள மசூதிகளை அந்த இரண்டு பிரிவினரால் பராமரிக்க முடியவில்லை. தாஜ்மகாலை எப்படி அவர்களால் பரா மரிக்க முடியும் என்று கேட்டுள்ளது