Friday, December 5, 2014

போனில் ஹாங்கிங் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

 ஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா, வாங்கும் போது பயன்படுத்த நல்லா இருக்கும், ஆனால் சில நாட்களில் ஸ்மார்ட்போன் உங்களுக்கு கொஞ்சம் பழகிவிட்டால் அதில் கண்ட அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொஞ்ச நாட்களில் அது வேலையை காட்ட ஆரம்பித்து விடும். ஹாங்கிங் பிரச்சனை ஆன்டிராய்டு, ஐஓஎஸ், என எல்லா போன்களிலும் இந்த பிர்ச்சனை சகஜமான விஷயம் தான். எந்த வகையான போன்களை பயன்படத்தினாலும் அதுல ஏதாச்சு பிரச்சனை இருக்க தான் செய்யுது. அந்த வகையில உங்க போனில் ஏற்படும் ஹாங்கிங் பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பாருங்க...

ஆன்டிராய்டு;முதலில் ஆன்டிராய்டு போன் ஹாங் ஆனால் என்ன செய்யனும்னு பாருங்க சார்ஜ் - முதலில் உங்க போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் முறைகளை பின்பற்றுங்கள்

ஸ்விட்ச் ஆஃப்;பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்

ரீஸ்டார்ட்;பவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள்

பேட்டரி;உங்களால் ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்

ஆப்ஸ்;உங்க போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள்

பேக்ட்ரி ரீசெட்;ஹாங் ஆன பின் உங்க போன் ஆன் ஆகவில்லை என்றால் பேக்ட்ரி ரீசெட் கொடுங்கள், இது உங்க போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும் ஆனால் இதை மேற்கொண்டவுடன் உங்க போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் டெலீட் ஆகிவிடும்

ஐபோன்;ஐபோன்களில் ஹாங்கிங் பிரச்சனை வந்தாஸ் என்ன அடுத்து செய்ய வேண்டும்.......

ரீஸ்டார்ட்;ஆன்டிராய்டு போன்களை போலவே உங்க ஐபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்

ஆப்ஸ்;நீங்க பயன்படுத்தாத அப்லிகேஷன்களை டெலீட் செய்துவிடுங்கள், போதுமான மெமரி இல்லாததாலும் போன் ஹாங் ஆகலாம்.......!

0 comments:

Post a Comment

Blog Archive