Wednesday, December 10, 2014

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது! – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல்

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  – அதிர்ச்சித் தகவல்

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  அங்கிருப்ப‍து

முருகக் கடவுகளே! என்பதற்கான ஆதாரங்கள் – அதிர்ச்சித் தகவல்

திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகி றாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழ க்கம் உண்டா?

*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக் கிறார்?

*எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது?

*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக் குள மும் இல்லாமல் இருக்கிறது?

*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா? (படத்தில் பார்க்க)
*கோவிலைச்சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் அனைத்துமே தமிழ்க்கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ ?

*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம் படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?

*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்ட வைத்திருப்பதை யும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்ட வைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீ ரா?

*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இரு க்காதே?
*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டு ள்ள சிலை, முருகர் சிலை என்றால் நம்புவீரா?

சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன் என்று பாடவில்லை); இளங்கோவடிகள் சில ப்பதிகாரத்தில் ‘வேங்கடத்து நெடியோனைப்’ பாடுகி றார்.
அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு ‘வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலை யில் உறைவோனே!’ என்று பாடுகிறார்.
சைவர்களும்வைணவர்களும் திருப்பதியைச்சொந்த ம் கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுசர் கருவ றையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரச முத்தி ரையோடு பூட்டு போட்டாராம்; மறுநாள் காலை திறந் து பார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்த தாம்; சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட னர்; உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தலமாக்கிவிட்டார்களாம்.


ஆம்சுடர்டாமில் இருந்து ரோசா மலர்கள், சுபெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கசுதூரி, சீனா வில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம் கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860 கோடி வருமானம் ஈட்டியுள்ளது; இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது;

0 comments:

Post a Comment

Blog Archive