Tuesday, December 9, 2014

Samsung Galaxy S6 தொடர்பான தகவல்கள் கசிந்தன

சம்சுங் நிறுவனம் அண்மையில் Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இக்கைப்பேசியானது பயனர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றிருக்கவில்லை.

இதனால் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள Samsung Galaxy S6 கைப்பேசியில் பல்வேறு சிறப்பம்சங்களை உட்புகுத்தியுள்ளது.

இதன்படி இணைய வேகமானது 450Mbps வரை காணப்படுவதுடன், 5.5 அங்குல அளவு மற்றும் 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவை தவிர பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும், 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக்கைப்பேசியானது 2015ம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைய வேண்டும்: வைகோ பரபரப்பு பேச்சு!


திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் தமிழகத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் மட்டும் இரண்டு திராவிட கட்சிகளும் எதிர்கட்சிகள்போல் செயல்பட்டு கொள்ளலாம் எனவும் வைகோ கூறியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, உலகில் வாழும் அனைவருக்கும் பொதுவான நூல் திருக்குறள் மட்டுமே ஆகும்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்துத்துவா கருத்துக்களை பரப்புவதற்காக பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு போரின்போது கண்ணன் போதிக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவைகளாக இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட மதத்தின் இதிகாச நூல் மட்டுமே ஆகும். இதனை எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோல், யாராவது ஒருவர் பைபிளையோ, குரானையோ தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ? அதேபோன்றதுதான் பகவத்கீதையும், ஆனால் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான நூல் திருக்குறள் மட்டுமே ஆகும். எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே திருப்பதிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்படும். அதேபோல் , ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆந்திராவிற்கு மதிமுக தொண்டர்கள் சென்றுள்ளனர் என்றார். மேலும், திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் தமிழகத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், தேர்தல் சமயத்தில் மட்டும் இரண்டு திராவிட கட்சிகளும் எதிர்கட்சிகள்போல் செயல்பட்டு கொள்ளலாம் எனவும் வைகோ கூறினார்.

இதே வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த போது, தமிழகத்தில் வீசும் மோடி அலையில் அதிமுகவும், திமுகவும் மாயமாகிவிட்டன என்று கூறினார். கூட்டணியில் இருந்து விலகிய உடன் மீண்டும் திராவிட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு மகனுக்கு கல்யாணம்! திரையுலகத்தில் ஒருவருக்கும் அழைப்பு இல்லை?

வனவாசம் போயிருக்கிறாரோ வடிவேலு என்று மற்றவர்கள் கவலைப்படுகிற அளவுக்கு மிகவும் பின் தங்கியிருக்கிறது அவரது வேகம். இப்பவும் வடிவேலுக்கென ஒரு பெரும் கூட்டம் மூடிய வாயோடு காத்திருக்க, அவருக்கோ தனது பழைய ஸ்டைல் காமெடியெல்லாம் மறந்துவிட்டது. இம்சை அரசன் 23 ம் புலிகேசி ஹிட் நினைப்பிலேயே இருக்கிறார். தன்னை நாடோடி மன்னன் எம்ஜிஆர் போல ஒரு முழுமையான ஹீரோவாகவே நினைத்துக் கொண்டு திரிவதும் அவரது சறுக்கல் ஸ்பெஷல்.

போகட்டும்… மதுரையில் டேரா அடித்து அவ்வப்போது அம்மாவின் அருகிலிருந்து அவரை கவனித்துக் கொள்ளும் வடிவேலு தன் மகன் சுப்பிரமணியை எப்படியாவது ஹீரோவாக்கிவிடலாம் என்ற முயற்சியும் செய்து கொண்டிருந்தார். வருகிற அத்தனை பேரும், ‘நீங்களே பணம் போடுங்கண்ணே. தம்பிய ஒரு இடத்துல வைக்காம ஓயக்கூடாது’ என்று வெண்ணையை வழிய விட, இது மாதிரி எத்தனை குழிகளை பார்த்திருப்பார் வடிவேலு? போங்கப்பா… என்று ஆசையை கிடப்பில் போட்டுவிட்டார். வேறு வழி? கல்யாணம்தான். மகனுடைய கல்யாணத்தை நாளை (10-12-14) சென்னையில் நடத்துகிறார்.

இன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆனால் திரையுலகத்தை சேர்ந்த மிக மிக நெருக்கமான ஒரு சிலருக்கு மட்டும் அழைப்பு விடுத்த வடிவேலு, மீதி அத்தனை பேருக்கும் ஒரு தகவலாக கூட இந்த விஷயத்தை சொல்லவில்லை. வந்து தின்னுபுட்டு அந்த பக்கம் போய் திட்டப் போறானுங்க. இதுக்கு எதுக்கு கூப்பிடுவானேன் என்கிறாராம்.

பட்டவங்களுக்குதான் தெரியும் கெட்டவங்க சகவாசம்!