Thursday, December 11, 2014

ரஜினியை விமர்சனம் செய்த முகநூல் கணக்கு முடக்கப்பட்டது!

தமிழில் மாற்று சினிமா வர வேண்டும் என்ற எண்ணத்தில் ‘தமிழ் ஸ்டூடியோ’ நடத்தி வருபவர் அருண். இவர் ‘பேசாமொழி’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையும் நடத்தி வருகிறார்.

அருண் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கடுமையாக விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை முகநூலில் பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராக ஏராளமான புகார்கள் வந்ததால் அருண் தமிழ் ஸ்டூடியோ கணக்கை முகநூல் நிர்வாகம் முடக்கி விட்டது.

இது தொடர்பாக அருண் வெளியிட்டுள்ள செய்தி: “அருண் தமிழ் ஸ்டுடியோ முக்கிய அறிவிப்பு.நண்பர்களே! ரஜினிகாந்த், ‘காவியத் தலைவன்’ பற்றிய என்னுடைய பதிவிற்காக மிக பரவலான புகார் முகநூல் நிர்வாகத்திற்கு சென்றிருக்கிறது. அதனால் என்னுடய அருண் தமிழ் ஸ்டுடியோ கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. எனவே இனிஎன்னுடைய அருண் தமிழ் ஸ்டுடியோ பக்கத்தில்தான் நான் எழுத முடியும் என்று முகநூல் நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.”

அருண் தமிழ் ஸ்டுடியோ முகநூல் கணக்கு முடக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர் ஜெயச்சந்திர ஹஸ்மி கூறியிருப்பதாவது:-

இரண்டு நாட்களாக ரஜினிகாந்தைப் பற்றிய ஒரு விமர்சனப் பதிவை எழுதியதற்காக தோழர் அருண் தமிழ் ஸ்டூடியோ அவர்களின் முகநூல் பதிவு முடக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அந்த பக்கத்தை ரிப்போர்ட் செய்ததால் ஃபேஸ்புக் நிர்வாகம் இதனை செய்துள்ளது.

அவர் எழுதியது சரியா தவறா என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் அதற்காக அந்த கணக்கையே முடக்குவது எப்படி சரியான பதிலடியாக இருக்கும்? எந்த ஒரு விஷயத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்தினால்தான் அந்தந்த துறையிலும் யாரும் எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். விமர்சனங்களுக்கு அஞ்சுபவர்களை நிச்சயம் கோழைகள் என்பதன்றி வேறென்ன சொல்ல? குறிப்பட்ட அந்த பதிவை மட்டுமல்லாது அவரது மொத்த முகநூல் கணக்கையே முடக்குவது என்பது முகநூல் வன்முறையின் உச்சம்.

அருண் கேட்டிருந்த கேள்விகளுக்கும் வைத்திருந்த விமர்சனங்களுக்கும் ரஜினி பிரியர்களால் பதிலளிக்க முடிந்திருந்தால், அல்லது அதற்கான நியாயமான எதிர்வினை புரிந்திருந்தால் நிச்சயம் இதுவொரு ஆரோக்கியமான விவாதமாகவே சென்றிருக்கும். அதுபோன்ற சில காட்டமான பதில்களையும் அந்த பதிவில் பார்த்தேன். பிறகேன் இப்படியொரு கூட்டு நடவடிக்கை என்று தெரியவில்லை.

ஆனால், அந்த பதிவிற்கான பழிவாங்கலாக இத்தனை வருடமாக அவரது அத்தனை உழைப்பும் செயல்பாடுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் அந்த முகநூல் கணக்கையே முடக்குவது மிகவும் மோசமான ஒரு முன்னுதாரணமாக அமையும்.

பொதுவில் ஒருவரையோ ஒரு படத்தையோ விமர்சனம் செய்யக்கூடாது என்றால், அந்த படத்தை நீங்கள் மட்டும் உங்கள் வீட்டு டிவியில் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நிஜத்தில் எப்படியோ, ஆனால் திரையில் எதிரிகளை தைரியமாக தொடை தட்டி எதிர்கொண்டு வெல்லும் ரஜினியின் ரசிகப் பெருமக்கள் இதுபோன்ற ஒரு முதுகில் குத்தும் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது நிச்சயம் அவனமானமான ஒரு விஷயம்.

மற்றபடி ‘எங்க தலைவரை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுனா என்ன நடக்கும்னு இப்ப தெரியுதா?’ என்று இதை செய்தவர்கள் காலரைத் தூக்கி கொண்டு வெற்று பந்தா அடிப்பார்களானால், மீண்டும் சொல்கிறேன், அத்தனை கோழைகளைத்தான் ரஜினி சம்பாதித்திருக்கிறாரா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அருண் மேல், அவரின் விமர்சனங்களின் மேல் உங்களுக்கு எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நிச்சயம் புறந்தள்ள முடியாது.

 இவ்வாறு ஜெயச்சந்திர ஹஸ்மி கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்டுள்ள கண்டனம் வருமாறு:

When I heard that my friend Arun who runs Tamil Studio, an independent movement for alternative cinema got hounded by Rajini fans for his critical opinion on Rajinikanth and made complaints to facebook in thousands to make his page removed, i lose faith in this space as a space for free expression! Though i have myself encountered cyber violence and attacks many times, this particular instance proves that mob culture has invaded internet and they can go to any level to finish people and their opinions when different than them.

Tomorrow, my page can also be banned by some retards who can mob up in hundreds and complain facebook for my critical opinions!

And it can be YOU as well!

0 comments:

Post a Comment