Thursday, December 11, 2014

திரௌபதிக்கு ஏன் 5 கணவர்கள் என்பது பற்றிய சில அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!!!

நம் அனைவருக்கும் மகாபாரதம் நன்றாக தெரியும்; அதில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பதும் தெரியும். ஆனால் அவருக்கு ஏன் ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பாண்டவர்களையும். கௌரவர்களையும் மையமாக வைத்து தான் மகாபாரதத்தின் கதை சுழல்கிறது. மகாபாரதத்தில் நடைபெற்ற குருஷேத்ர போரின் போது, உச்ச நிலைக்கு சென்ற பல நிகழ்வுகளை இந்த காவியம் விளக்குகிறது. மிகப்பெரிய இந்த காவியத்தில், குருஷேத்ர போரில் சண்டையிட்ட ஆண் கதாபாத்திரங்களைப் பற்றி வீரமுள்ள பல கதைகள் உள்ளது.

அவர்கள் வாழ்வார்களா, மாட்டார்களா என்பதை அந்த கதைகள் நமக்கு கூறும். இந்த புராணத்தில் மற்றொரு முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்றும் உள்ளது. மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய குருஷேத்ர போர் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததும் இவரே. ஆம், நாம் பேசிக்கொண்டிருப்பது திரௌபதி பற்றி தான்.
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: காந்தாரிக்கு உண்மையிலேயே 101 குழந்தைகள் இருந்தார்களா?

இந்த புராணம் முழுவதும் மிக சக்தி வாய்ந்த பாத்திரமாக இருந்து வந்துள்ளார் திரௌபதி. பஞ்சால ராஜ்யத்தின் இளவரசியான திரௌபதி, பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் மனைவியாக இருந்துள்ளார். மேலும் மிகப்பெரிய அறிவாற்றல் மற்றும் தன் கணவர்களிடம் மிகுந்த பக்தியை கொண்ட ஒரு புதிரான பெண்மணியாக அவர் விளங்கினார். திரௌபதியைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ஈர்க்கும் விதமாக இருக்கும். அவருடைய அழகு, பெருமை, பக்தி, காதல், அவரடைந்த அவமானம் மற்றும் அவரின் சபதம் பற்றிய அனைத்து கதைகளை கேட்கும் போதும் நம்மை மதிமயக்க செய்து விடும்.
இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

ஆனால் சகோதரர்களாகிய ஐந்து ஆண்களுக்கு மனைவியாக இருந்தது எப்படி இருந்திருக்கும்? ஆனால் பூர்வ ஜென்மத்தில் வாங்கிய வரத்தால், இந்த ஜென்மத்தில் ஐந்து கணவர்களுக்கு மனைவியாக வேண்டும் என்று ஏற்கனவே அவருக்கு விதி எழுதப்பட்டிருந்தது. திரௌபதிக்கு ஏன் ஐந்து கணவன்கள் என்பதைப் பற்றி விவரமாக தெரிந்து கொள்வோமா?

தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் ஒரு துறவிக்கு மகளாக பிறந்தார் திரௌபதி. தனக்கு திருமணமாகாத காரணத்தினால் அவர் வருத்தமாக இருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் சிவபெருமானை நினைத்து கடுமையான தவத்தில் ஈடுபட்டார். பல வருட தவத்திற்கு பின்னர் மனம் குளிர்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி அவருக்கு வரம் ஒன்றை அளித்தார். ஐந்து குணங்கள் அடங்கிய கணவனை அவர் வரமாக கேட்டார்.
தன் கணவனுக்கு ஐந்து குணங்கள் இருக்க வேண்டும் என திரௌபதி கேட்டார். முதல் குணம் – ஒழுக்க நெறியுடன் வாழ்பவர். இரண்டாவது – வீரம் நிறைந்தவராக இருத்தல். மூன்றாவது – அழகிய தோற்றத்துடன் கூடிய ஆண்மகன். நான்காவது – அறிவாளியாக இருத்தல். ஐந்தாவது – அன்பும் பாசமும் கொண்டவராக இருத்தல்.

சற்று நேரம் சிந்தித்த சிவபெருமான், இந்த ஐந்து குணங்களும் ஒரே ஆணிடம் இருக்க சாத்தியமில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் இந்த ஐந்து குணங்களை தனித்தனியாக கொண்ட ஐந்து ஆண்களுக்கு மனைவியாகும் வரத்தை அவர் திரௌபதிக்கு அளித்தார். அதனால் அடுத்த ஜென்மத்தில் துருபத மகாராஜாவிற்கு அவர் மகளாக பிறந்த போது, ஐந்து சகோதரர்களை மணக்க வேண்டும் என ஏற்கனவே எழுதப்பட்ட விதியோடு தான் அவர் பிறந்தார்.

புராணத்தை சற்று ஒதுக்கி வைத்து பார்த்தால், அக்காலத்தில் ஒரு பெண் பல கணவர்களை மணந்து கொள்ளும் பழக்கத்தையும், ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்ளும் பழக்கத்தையும் நாம் ஒதுக்கி விட முடியாது. திரௌபதி விஷயத்தில், அதாவது ஒரு பெண் பல ஆண்களை மணப்பதற்கு இப்படி காரணங்களை கூறலாம் – இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இன்றைய திதி வரை, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில், ஆண்களை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பழங்கால அஸ்தினாபூரும் இந்த வட்டாரங்களை ஒட்டியே அமைந்துள்ளது. அதனால் மணப்பெண்களின் எண்ணிக்கைகள் குறைவாக இருந்த காரணத்தினால் திரௌபதி ஐந்து ஆண்களை திருமணம் செய்ததற்கான வாய்ப்புகள் உள்ளது.

சுயம்வரம் முடிந்து திரௌபதியுடன் வீட்டிற்கு திரும்புகையில், தன் தாயிடம் அர்ஜுனன் வேண்டுமென்றே முதலில் இப்படி கூறுகிறார் “நாங்கள் கொண்டு வந்திருப்பதை பாருங்கள் அன்னையே”. அர்ஜுனன் எதை குறிப்பிடுகிறார் என பெரிதாக யோசிக்காமல், கொண்டு வந்ததை சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு குந்தி தேவி கூறினார். தன் தாயின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தில், திரௌபதியை ஐந்து பேரும் தங்களின் மனைவியாக ஏற்றுக் கொண்டனர். புறநிலையாக இதை பார்த்தோமானால், போர் வரும் நேரத்தில் போரில் ஜெயித்திட தன் புதல்வர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என குந்தி தேவி விரும்பினார். அதற்கு காரணம் போர் வரும் என அவர் எதிர்பார்த்திருந்தார். திரௌபதியின் எழில் கொஞ்சும் அழகு தன் புதலவர்களை பிரித்து விடும் என அவர் எண்ணினார். அவள் மீது அனைவரும் கொண்ட காமத்தை அவர் கண்டார். அதனால் குந்தி தேவி செய்தது மிகவும் வினைமுறைத் திறத்துடன் கூடிய விஷயமாகும். திரௌபதிக்காக சண்டையிடக் கூடாது என்ற காரணத்தினால் திரௌபதியை பகிர்ந்து கொள்ளுமாறு தன் புதல்வர்களிடம் கூறினார்.

0 comments:

Post a Comment