Monday, December 1, 2014

உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..?

உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..?
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பாரிய பிரச்சனையே தங்களுடைய ரகசியங்களை காப்பாற்றுவதுதான்.

புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் நமது ஸ்மார்ட்போனில் என்ன தான் லாக் செய்து வைத்திருந்தாலும், எளிதாக ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றுவிடுகிறது.
இதெற்கென எத்தனையோ ஆப்ஸ்-கள் வந்தாலும் அவை அனைத்தையும் எளிதாக கடந்து உள்ளே சென்று புகைப்படங்களை பார்க்க முடிகின்றது.கேலரியை லாக் செய்தால் எல்லா போட்டோஸுமே லாக் ஆகும். ஆப் லாக்போட்டு லாக் செய்தால் செட்டிங்ஸ்-ல் போய் ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) செய்து ஆப்ஸை க்ளீன் போல்ட் ஆக்கி உள்ளே நுழைந்து விடலாம்..

நம் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற ஸ்மார்ட் சேஃப் ஆப் -இன்று அதிகபட்ச ஸ்மார்ட்போன் யுசர்களால் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆப் தான் – கீப் சேஃப் ஆப்ஸ் (Keep Safe Vault).
நாம் எவ்வளவுதான் லாக்கிங் ஆப்ஸ் போட்டு கேலரியை பாதுகாப்பாக வைத்தாலும், சிலர் இலகுவாக உள்ளே நுழைந்து நம்ம கேலரியை பயன்படுத்துவார்கள்.
அப்படி நடக்காமல் இருக்க கீப் சேஃப் ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்வதுதான் சிறந்தது. இதை ஐ-போன், ஸ்மார்ட்ப ோன்களிலும் இன்ஸ்டால் செய்யலாம்.

இந்த ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்ததும் நமது இ-மெயில் கணக்கை வைத்து பதிவு செய்து ஆப்ஸ்-ஐ ஆக்டிவேட் செய்தால் போதும். நமக்கு தேவையான போட்டோஸ், வீடியோவை மட்டும் லாக் பண்ணி வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
கீப் சேஃப் ஆப்ஸ்-ன் ஸ்பெஷாலிட்டியே ஃபேக் பாஸ்வேர்ட் அன்ட் ஃபேக் பேக்ரவுண்ட் தான். யாராவது கீப் சேஃப் ஆப்-ஐ ஒப்பன் செய்தால் ஸ்கீரின் System Scan Complete-என்று தான் வரும். ஸ்கேனர்னு நினைத்து அவங்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.

ஆனா நமக்குதான் தெரியும் கீப் சேஃப் லோகோவை ப்ரெஸ் செய்தால் மட்டுமே பாஸ்வேர்ட் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும் என்று. அப்படியே அவர்கள் போனாலும் நம்பர் பாஸ்வேர்ட் போட்டால்தான் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும்.

இவற்றிலும் ஒரு உத்தி உண்டு. ஃபேக் பின் போட்டு நம்மால் உள்ளே போகமுடியும் ஆனால் உள்ள எந்த போட்டோஸ், வீடியோஸும் இருக்காது.
நமக்கு மட்டுமே தெரிந்த சீக்ரெட் பாஸ்வேர்ட் போட்டால் மட்டுமே கேலரி ஓப்பன் ஆகும்.
கீப் சேஃப் ஆப்ஸை தரவிறக்க இந்த link-ஐ பயன்படுத்தலாம்

https://play.google.com/store/apps/details?id=com.kii.safe

0 comments:

Post a Comment

Blog Archive