Wednesday, December 10, 2014

பற்களுக்கும் பணத்திற்கும் இடையே உள்ள‍ ஆச்சரியமான தொடர்பு – வியக்க‍ வைக்கும் தகவல்



பற்களுக்கும் பணத்திற்கும் இடையே உள்ள‍
 ஆச்சரியமான தொடர்பு – வியக்க‍ வைக்கும் தகவல்
என்ன தலைப்பே வித்தியாச மாக உள்ளதா….

இதனைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல் வீர்கள்?

பணக்காரர்கள் என்றால் மருத்துவ முறையில் புதிய பற்களை வைத் துக்கொள்ள முடியும், ஏழைகளால் அது முடியாது. இதைத்தவிர பண த்திற்கும், பற்களுக்கும் என்ன சம் பந்தமும் கிடையாது என பெரும் பாலானோர் கூறுவதுண்டு. ஆனா ல் சம்பந்தம் உள்ளது என தற்போ தைய ஆய்வு முடிவு ஒன்று கூறுகி றது. இது லண்டனில் பெரியவர்க ளுக்கான பற்களைப் பற்றிய ஆய் வினை அடிப்படையாகக் கொண்ட முடிவுகள்.

இதில் லண்டனைச் சேர்ந்த 21 வயதிற்கு மேற்பட்ட, சுமார் 6000 மக்களை ஆய்வுக் குட்படுத்தினர். இந்த 6000 பேரில் பணக்காரர்கள், ஏழைகள் என அனைத்து வருவாய் நிலையில் இரு ப்பவர்களும் சேர்ந்திருந் தனர். இந்த ஆய்வின் முடிவில், மனிதனின் எழுவதாவ து வயதுகாலத்தில் பணக்காரர்களுக்கு இருக்கும் பற்க ளைவிட ஏழைகளுக்குக் கிட்டத்தட்ட 8 பற்கள் குறை வாக இருப்பதாகத் தெரிவிக் கப்பட்டது. மனிதனுக்கு சாதாரணமாக 32 பற்கள் உண்டு, அதிலும் 8 பற்கள் இல்லையென்பது நான்கில் ஒரு பங்கு போன்றது. இத்தனை பெரிய வித்தியாசம் நம் வாழ்க்கை முறையினை அடிப்படையாகக் கொண்டிரு ப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

இத்தனை விஷயங்களும், உடல்நலம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட நிறுவனங்க ளான நியூகேஸ்டில் பல் கலைக்கழகம் மற்றும் சமூக ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் போன்றவை இணைந்து நடத்திய ஆய்வில்தான் வெளிவந்துள்ளன. மேலும் ஏழைகளின் உடல் நிலையினை பணக்காரர்களி ன் உடல்நிலையுடன் ஒப்பிடு ம்போது ஏறக்குறைய 20%  மோசமாக உள்ளதாக கண்ட றியப்பட்டது.

65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த பொரு ளாதார வித்தியாசங்கள் மிகவும் அதிகளவில் இருக்கி றது. இது பற்றி பேராசிரி யர் ஜிம்மி ஸ்டீல் கூறுகை யில், “பணக்காரர்களின் உடல்நிலைக்கும், ஏழைக ளின் உடல்நிலைக்கும் வித்தியாசங்கள் இருப்பது ஆச்சரியமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த வித்தியாசங்களின் அளவு மிகப்பெரியதாக இருப்பது கண்டிப்பாக வியப்பினை ஏற் படுத்தும்”.
என்னதான் நாம் நமது உடல் நிலையினை பேணிப் பாதுகாத்தாலும் நம்மைச் சுற் றியிருக்கும் சூழ்நிலைகளும் நம் உடல் நிலையில் பாதிப்பினை ஏற்படு த்தும் என்பதற்கு இந்த ஆய்வு முடிவுகளேச் சான்று.

0 comments:

Post a Comment

Blog Archive