Monday, December 15, 2014

நடிகர் விஜய் ஒரு தேவாங்கு

 ஒரு நிமிஷம் இதை நங்கள் சொல்லவில்லை எங்களை திட்டவேண்டாம், இதை கூறியது குறிப்பிட்ட வார இதழ். ஆம் ஆனால் இது இப்போது கூறியதும் இல்லை, அதாவது நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் தன் முதல் படத்திற்காக பெற்ற முதல் பத்திரிகை விமர்சனம் இதுதான்.

விவரமாகவே சொல்கிறோம், நடிகர் விஜயின் முதல் படமான “ நாளைய தீர்ப்பு “ வெளிவந்த சமயத்தில் அதற்கு குறிப்பிட்ட வார இதழ் வெளியிட்ட விமர்சனத்தில் “ இந்த நடிகர் பார்ப்பதற்கு தேவாங்கு போல் இருக்கிறார், தன் மகன் என்ற காரணத்தால்தான் இயக்குனர் S.A.C அவர்கள் நடிக்க வைத்துள்ளார் “ என்ற ரீதியில் அந்த விமர்சனம் அமைந்தது. ஆனால் அதே குறிப்பிட்ட வார இதழ் சில மதங்களுக்கு முன் நடிகர் விஜய்க்கு “ Next Super Star “ அதாவது “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டதை கொடுக்க அதிக முனைப்புடன் செயல்பட்டு வந்ததது நமக்கேத் தெரியும்.

இதனால் தமிழ் திரையுலகில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதும் நமக்குத் தெரியும். எதன் காரணமாக திடிரென்று நடிகர் விஜய்க்கு “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டம் தர இவ்வாறு முனைப்பு காட்டியது என்று விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டோம். அந்த குறிப்பிட்ட வார இதழின் விற்ப்பனை அதள பாதாளத்திற்குள் சென்றுவிட்டது அதை மீட்டு அதிக விற்ப்பனை செய்ய யோசனையில் இருந்தபோதுதான் இந்த “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ திட்டத்தை கையில் எடுத்தது.

இதை ஆரம்பிக்கும்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். அந்த குறிப்பிட்ட வார இதழ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள் அதற்கு “ சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது ரஜினிகாந்தின் சொத்தோ அல்லது ‘ அடுத்த சூப்பர்ஸ்டார் ‘ பட்டம் குறித்த வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை “ என்று காட்டமாகவே பதில் வந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அந்த குறிபிட்ட வார இதழுக்கு எதிராக ஆதரவு திரட்டினார்கள் அதில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் அடக்கம். இதனால் அப்போது அந்த திட்டத்தை கைவிட்டது.

இருந்தும் மறுபடியும் இந்த திட்டத்தை செயல்படுத்தி அவர்களாகவே நடிகர் விஜய்தான் “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ அறிவித்தது. ஆனால் இதில் உண்மையாக வெற்றி பெற்றது அஜித்தான், அவர்தான் அதிக வாக்குகள் பெற்றார் என்று என்ற செய்தியும் வந்தது. ஆனால் நடிகர் விஜய் இந்த வாக்கெடுப்புக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றுத்தெரியவில்லை மாறாக தன்னை “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ தேர்ந்தெடுத்த குறிபிட்ட வார இதழுக்கு நன்றி என்று அறிக்கையில் கூறியிருந்தார்.

அங்கேதான் இந்த பிரச்சினை சூடு பிடித்தது, அந்த வார இதழ் நிர்வாகம் உடனே சுதாரித்துக்கொண்டு காரியத்தில் இறங்கி மதுரையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விழா எடுத்து “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டம் வழங்க முயற்சி செய்ததது. இந்த முயற்சியில் மண் விழுந்த கதையாக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிகழ்வோடு இந்த பிரச்சினை அடங்கியிருக்கிறது ஆனாலும் உள்ளுக்குள் இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது.

இதில் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்


ஒரு பேருந்து, ஒரு விமானத்திற்கு சமமில்லை அதேபோல் ஒரு விமானம், ஒரு பேருந்துக்கு சமமில்லை, ஆகாயத்தில் செல்ல விமானம்தான் பயன்படும் சாலையில் செல்லல பேருந்துதான் பயன்படும் ஆனால் இரண்டும் ஒன்றுகொன்று சளைத்ததும் அல்ல.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் M.G.R-ருக்கு ரஜினி சமமில்லை, ரஜினிக்கு விஜய் சமமில்லை, விஜய்க்கு சூர்யா சமமில்லை, சூர்யாவுக்கு தனுஷ் சமமில்லை மேலும் தனுஷ்க்கு சூர்யா சமமில்லை, சூர்யாவுக்கு விஜய் சமமில்லை, விஜய்க்கு ரஜினி சமமில்லை, ரஜினிக்கு M.G.R-ம் சமமில்லை.

இங்கே திறமை இல்லாதோர் யாருமில்லை. ஆதலால் ரசிகர்கள் இந்த சச்சரவுகளுக்கு இடம் தராமல் மூன்றாவது நபர் சுய லாபம் தேடிக்கொள்ள உதவி புரியாமல் நல்ல சினிமாக்களை ஆதரிக்க வேண்டும் தங்கள் விருப்ப நடிகர்கள் படங்களையும் ஆதரிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment