Monday, December 15, 2014

பள்ளிகளுக்கு கிருஸ்துமஸ் விடுமுறை ரத்தாகிறதா! நடப்பது என்ன..?

கிருஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று பள்ளிகளுக்கு வழக்கம் போல விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய மனித

 டிசம்பர் 25-ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என நவோதயா பள்ளிகளுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

 இதற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கிருஸ்துவசமுதாய மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் இதனை மறுத்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, அன்றைய தினம் நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனையொட்டி திட்டமிடப்பட்டுள்ள கட்டுரைப்போட்டி, இணையதளம் வழியாகவே நடத்தப்படும் என்றும் பங்கேற்கும் மாணவர்கள் கட்டுரை போட்டியில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் ஆதரமற்ற செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினத்தை குரு உத்சவ் தினமாக கொண்டாட சுற்றறிக்கை அனுப்பியதற்கும், 6ஆம் வகுப்பு மாணவர்கள் சமஸ்கிருதம் அவசியம் கற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதற்கும் கண்டன குரல்கள் எழுந்தன.

தற்போது கிருஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று விடுமுறை இல்லை என்று கூறப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment