Saturday, December 20, 2014

ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன உண்மை சம்பவம்

வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவரை இழுத்து நடனமும் ஆடியுள்ளார். இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர்.

இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது. திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டனர்.

உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் இந்த  திருமணம் நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது.
ஒரு முத்தத்தால் திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பகுதியில் திருமண நேரத்தில் மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுப்பது, அவர்களுடன் நடனம் ஆடுவது என்பது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

முத்தங்கள் பலவகை …..மொத்தமும் அறிந்தவர் யார்??

0 comments:

Post a Comment