Saturday, December 20, 2014

கொடுமைகளை இழைத்த கூடாரத்திற்கே ஓடும் கங்கை அமரன் …..

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் தம்பி என்ற ஒற்றை தகுதியை வைத்துக்கொண்டு திரையுலகில் தன்னை பொருளாதார அளவில் தன்னை செழுமையாக்கி கொண்டவர் கங்கை அமரன் ….

பிறப்பால் ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்தவர் பல பல தீண்டாமை கொடுமைகளை அனுபவித்த குடும்பம் இவரது குடும்பம்.

இவரது மூத்த அண்ணண் பாவலர் வரதாரஜன் அவர்கள் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக பொதுவுடமை கட்சிகளில் களமாடியவர் அக்கட்சிகளின் மேடைகளில் கச்சேரி நடக்கும்போது கங்கைஅமரனும் பங்கேற்று தீண்டாமை மற்றும் ஆதிக்க சாதிகளுக்கு எதிரான பாடல்களை பாடுவதுண்டு …..

பிறகு சினிமாவிற்கு வந்து அண்ணண் இளையராஜாவின் தயவால் அவரின் நிழலியே வளர்ந்து இயக்குனராக இசையமைப்பாளராக உயர்ந்தார் பொருளாதாரத்திலும் செழுமையடைந்தார் …

ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து பல கொடுமைகளை அனுபவித்த இவர் உயர்ந்த பிறகு அந்த கொடுமைகளில் இன்னும் சிக்க தவிக்கும் மக்களுக்காக இதுவரை ஒன்றுமே செய்ததில்லை …

இந்த நிலையில் …நேற்று இவர் தன்னை பாஜகவில் ஐக்கியப்படுத்திக்கொண்டார் …

எந்த இந்துத்வ கொள்கைகள் இவரை ஒடுக்கியதோ ஊர் ஊராக ஓட வைத்ததோ தீண்டாமை கொடுமைகளை அனுபவிக்க வைத்ததோ அந்த இந்துத்வத்திற்கு தாளமிட சென்ற கங்கை அமரன் அவர்களே …

பொருளாதாரம் செழுமை பெற்றதும் தீண்டாமையால் ஏற்பட்ட வடுக்களை மறந்த உங்களின் மன போக்கு எத்தகையது ?

இன்னும் சாதிய கொடுமைகளால் அவதியுறும் மக்களின் பணம் தான் உங்களின் தற்போதைய செழுமைக்கு காரணம் என்பதை மறந்தது ஏன் ?

சேர்ந்த இடத்திலும் அங்கே இருப்பவர்கள் உங்களை ஒடுக்கபட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற கண்ணோட்டதோடுதான் பார்ப்பார்கள் என்பதை காலம் செல்ல செல்ல நீங்கள் உணருவீர்கள் ….

கங்கை அமரனின் இந்த அரசியல் பாதை பிணங்கள் மிதக்கும் கங்கையைவிட அசுத்தமானது என்பதை உரத்து சொல்வேன்.

0 comments:

Post a Comment