Sunday, December 14, 2014

ஃபேஸ்புக்கில் ஒரு சாட் அசிங்கமாக நீண்டால்

ஃபேஸ்புக்கில் யாரோ என்றோ யாருடனோ செய்த chatஐ ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பரப்புகிறார்களாம்.. ஆதரவாகவும் எதிராகவும் பல பதிவுகள்.. 2000-2004 கால கட்டம்.. தமிழகத்தில் பரவலாக எல்லாம் ஊர்களிலும் ப்ரௌசிங் செண்டர் வர ஆரம்பித்தன.. இப்போது இங்கு பெரிய நொன்னைகளாக இருப்பவர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் முதன்முதலாக இண்டர்நெட்டில் எதைத் தேடினோம்? எதற்காக ப்ரௌசிங் செண்டர் எல்லாம் போனோம்?

இங்கும் ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.. இது ஒரு common ஆன விஷயம் தான்.. ஆரம்ப காலத்தில் ஒரு வித கிக்கிற்காக, மனக்கிளர்ச்சியில் இதையெல்லாம் செய்வார்கள்.. போகப்போக maturity வந்து விடும்..

வீட்டில் பதின்ம வயதில் இது மாதிரி காரியம் செய்து மாட்டிக்கொள்ளும் நம் பிள்ளைகளைப் பக்குவமாகப் பேசி, அவர்களுக்குப் புரியவைப்போமா, அல்லது சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரனிடம் எல்லாம் “என் பிள்ளையோட லட்சணத்தைப் பாரு”னு தம்பட்டம் அடிப்போமா? அந்தப் பக்குவத்தை ஏன் நம்மால் பிறரிடம் காட்ட முடியவில்லை? நம் வீட்டுப்பிள்ளை என்றால் நமது மானமும் அதில் சேர்ந்து கப்பல் ஏறிவிடும் என்கிற பயம்.. ஆனால் அதுவே இன்னொருவன் என்றால், அவன் மானம் கெடுவதைப் பற்றி நாம் யோசிப்பதேயில்லை..

இரண்டு வரிகளுக்கு மேல் ஒரு சாட் அசிங்கமாக நீண்டால் அதில் தவறு ஒருவர் பக்கம் மட்டும் கண்டிப்பாக இருக்காது.. அதே மாதிரி ஃபேஸ்புக், இண்டர்நெட்டில் எல்லாம் ஒருவர் ஆரம்ப காலத்தில் இது போல் செய்வதும் சகஜம் தான்.. முடிந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருங்கள், அல்லது அவருக்கு தனிப்பட்ட முறையில் பக்குவமாக அறிவுரை கூறுங்கள்.. தேவையில்லாமல் ஊர் முழுக்க தம்பட்ட அடிப்பது எதற்கும் பிரயோஜனப்படாது..

0 comments:

Post a Comment