Monday, December 22, 2014

ஜெ.,வை - போதையில் பேசினால்..விஜயகாந்த்தை உள்ள வச்சி மாறுகால் மாறுகை எடுத்துடுவன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியது. அப்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ ராஜா அதிமுகவுக்கு  ஆதரவாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியே கட்அவுட் வைத்தார்.

காவல் துறையில் உள்ள ஒருவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது போலீஸ் அதிகாரிகள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கட்அவுட்டை இரவோடு இரவாக போலீசார் அப்புறப்படுத்தினர்.

ஆனால், கட்அவுட் வைத்த ராஜா மீது  துறை ரீதியிலான எந்த நடவடிக்கையும் இல்லை. இதைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை  தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அதே சிறப்பு எஸ்ஐ ராஜா தனது சீருடையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு  தெரிவித்தார்.

இதுவும் போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதும் அவர் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், போலீசார் தற்போது தனக்கு சல்யூட் அடிப்பதாக  கூறி இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து விஜயகாந்த்திற்கு எதிராக வாட்ஸ் அப்பில்
ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: மதுரையில் பேசிய விஜயகாந்த், 3 வருடமாக சல்யூட் அடிக்காத போலீஸ்காரங்க இன்று என்னைப் பார்த்து சல்யூட் அடிக்கிறாங்க என்று பேசி இருக்கிறார்.

அவர் எம்எல்ஏ  என்ற முறையில் சல்யூட் அடித்து இருப்பார்கள். அதையே அவருக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, எங்கள் தமிழகத்தின் தவப்புதல்வி, மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி  அம்மா சிறை சென்றுவிட்டதால் சல்யூட் அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

இதுமாதிரி பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ளுமாறும், ஜெயலலிதாவை போதையில் பேசினால் அவர் மீது எம்எல்ஏ என்றும் பாராமல் அவதூறு வழக்கு தொடர  வேண்டியது இருக்கும் என்றும் எச்சரிக்கிறேன். இப்படிக்கு சிந்தாதிரிப்பேட்டை சிறப்பு எஸ்ஐ ராஜா என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சிறப்பு எஸ்ஐ ராஜாவின் இந்த வாட்ஸ் அப்  தகவல் தேமுதிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment