Wednesday, December 3, 2014

சைக்கிள் பம்ப் மூலம் நடத்தப்படும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை!

ஒடிசாவில் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபோது டாக்டர் சைக்கிள் பம்ப் பயன்படுத்திவதாக புகார் எழுந்துள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தக் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் 13 ஏழைப் பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் புவனேஷ்வரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனார்பால் கிராமத்தில், அரசு சார்பில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இந்த கிராமத்தின் சுற்று வட்டப் பகுதிகளில் இருந்து வந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களுக்கு  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது சைக்கிளுக்கு காற்று அடைக்கும் பம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏனென்றால், அந்தக் கிராமத்திலுள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் கிடையாது. அதேபோல, மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் போதிய உபகரணம் இல்லாமல் இருந்துள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனை மருத்துவர் மகேஷ் சந்திரா ராவுத், கூறுகையில், “இன்சப்லேட்டர்ஸ் கருவி வசதி இல்லாத நிலையில் சைக்கிள் பம்ப் பயன்படுத்தப்படுகிறது. இதனை பெரிய பிரச்சினையாக எந்தக் காரணமும் இல்லை, இது மிகவும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இது மலிவான மாற்று முறையாகும்” என்றார்.

சைக்கிள் பம்ப் பயன்படுத்தி நடத்தப்படும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை!.

மேலும், தான் இதுவரையில் 60,000 குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறுகையில், ”சைக்கிள் பம்ப் மூலம் செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்றார்.



இது குறித்து அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Blog Archive