Thursday, November 27, 2014

அரிதான காயத்தால் உயிரிழந்த ஹீயூக்ஸ்: மருத்துவரின் லைவ் ரிப்போர்ட்

பவுன்சர் பந்தில் அடிபட்டு பிலிப் ஹியூக்ஸிற்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய காயம் அரிதானது என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டோனி கிராப்ஸ் தெரிவித்துள்ளார்.

அடிபட்டவுடன் முதுகெலும்பு தமனி முறிந்தது. இதனால் கடுமையாக குருதிப்போக்கு ஏற்பட்டது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து டோனி கிராப்ஸ் கூறுகையில், முதுகுத் தண்டையும், மூளையையும் பாதுகாக்கும் சப்அரக்னாய்டு சவ்வுகளில் குருதிப்போக்கு ஏற்பட்டு பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார்.
இது மிகவும் அரிதாக நிகழ்வதே. மொத்தமாகவே இதுவரை இது போன்ற நிலை 100 பேர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு மூளையின் அந்தப் பகுதியில் அழுத்தத்தைக் குறைக்க சிகிச்சை அளிக்க முடிவெடுத்தோம். அதன் பிறகு மண்டை ஒட்டின் சில பகுதிகளை அகற்றி மூளை விரிவடைய வழிவகை செய்தோம்.
ஏனெனில் மூளை ரத்தக்கட்டினால் சுருங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அறுவை சிகிச்சை சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. அதன் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அவரை மாற்றினோம்.
இவ்வகை விடயங்களில் எங்களது அணுகுமுறை என்னவெனில் அவரை கோமாவில் ஆழ்த்துவது. ஏனெனில் மூளைக்கு ஓய்வு அளிக்கப்படவேண்டும். ஆனால் அதே சமயத்தில் உடலின் மற்ற செயல்பாடுகளை கண்காணித்து வந்தோம்.

24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காத்திருந்தோம், எங்களால் முடிந்தவற்றைச் செய்து பார்த்தோம், ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடைசியாக அவர் உயிர் பிரிந்தது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Blog Archive