Saturday, November 29, 2014

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்.....

சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு பழமும் அவர்களின் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை.

பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு சில பழங்களை உண்ணாமல் இருப்பது நல்லது ஏனெனில் இரத்தத்தின் சர்க்கரை அளவை அது மோசமான அளவிற்கு உயர்த்தக்கூடும்.

பெரும்பான்மையான பழங்கள் அவைகளின் சர்க்கரை அளவின் படி தான் பிரிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழத்தை உண்ணும் முன் அதன் GI குறியீட்டு எண்ணை (Glycemic Index) கண்டறிந்த பின் உண்ண வேண்டும். GI குறியீடு என்பது கிளைசீமிக் குறியீட்டைக் குறிக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைவான அளவுள்ள குறியீட்டை கொண்ட பழங்களை உண்பது நல்லது. ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் ஆகியவைகளில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம்.

மாம்பழம்

பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.

சப்போட்டா

இந்த பழத்தில் GI குறியீட்டு எண் 55க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது.

அன்னாசி

இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

வாழைப்பழம்

அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதன் GI 46 முதல் 70 வரை உள்ளது. முழுவதும்ம பழுத்த வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

பப்பாளி

59 GI உடைய இப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவு ஏறாதவாறு உண்ணுதல் உதந்தது.

தர்பூசணி

குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் சர்க்கரை மட்டும் 72 GI அளவிற்கு உள்ளது. இப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

சீத்தாப்பழம்

வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதையும் தவிர்க்க வேண்டும். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

0 comments:

Post a Comment

Blog Archive